உங்க கிட்ட கவர்ச்சி இல்லை...அதனால வாய்ப்பு இல்லை.. அமலாபாலை கதற வைத்த சினிமா பிரபலம்.!
தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் அமலா பால். கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியான மைனா படத்தில் நடித்ததன் மூலம் இவர் ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானவர். ஆரம்ப காலகட்டத்தில் டாப் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்த அமலா பால் இப்போது சிறிய பட்ஜெட் படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.
இவருக்கு பெரிய படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் கூட, இன்னும் இவருக்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளம் இன்னும் குறையவில்லை என்று கூறலாம். இவர் தற்போது மலையாள இயக்குனர் அனூப் எஸ். பணிக்கர் இயக்கத்தில் “கடாவர்” எனும் திரைப்படத்தில் நடித்துமுடித்துள்ளார்.
இந்தத் திரைப்படம் வரும் 12-ஆம் தேதி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதனை முன்னிட்டு படத்தில் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் அமலா பால் பேசியது சிறுது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படியுங்களேன் -ரோலக்ஸ் கதாபாத்திரத்தை மிஞ்சும் சூர்யா!…இன்ப அதிர்ச்சி கொடுத்த இயக்குனர் ஷங்கர்!…
அதில் பேசிய அமலா பால் " இந்த படம் வெளிவரக்கூடாது என பல தடைகள் வந்தது. படத்தில் நான் கவர்ச்சியாக இல்லை என்பதற்காக சில முக்கிய விநியோகதஸ்தர்கள் இது தியேட்டர் படம் இல்லை என கூறி தட்டி கழித்து விட்டனர் " என்று வருத்தத்துடன் பேசி உள்ளார் அமலா பால்.