30 வருடங்களுக்குப் பின் தமிழில் ரீ என்ட்ரி கொடுக்கும் 90களின் கனவுக்கன்னி..!!

by adminram |   ( Updated:2021-09-27 04:48:34  )
amala-01
X

டி.ராஜேந்தர் இயக்கி, இசையமைத்து, ஒளிப்பதிவு செய்து, கதாநாயகனாக நடித்த 'மைதிலி என்னை காதலி' படத்தின்மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை அமலா. இதன்பின் மெல்லத்திறந்தது கதவு, வேதம் புதிது, வேலைக்காரன், சத்யா என பல படங்களில் நாயகியாக நடித்தார்.

தமிழைத்தவிர இவர் மலையாளம், தெலுங்கு, கன்னடா, ஹிந்தி ஆகிய மொழிப்படங்களில் நடித்துள்ளார். இது தவிர இவர் சில தொலைகாட்சி சீரியல்களிலும் நடித்துள்ளார். 90களில் முன்னணி நடிகையாக வந்த இவர், தான் டாப் நடிகையாக இருந்தபோதே தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவை திருமணம் செய்துகொண்டார்.

இவர் நாகார்ஜுனாவிற்கு இரண்டாவது மனைவி என்பது குறிப்பிடத்தக்கது. நாகார்ஜுனா முதலில் தெலுங்கு நடிகர் வெங்கடேஷின் தங்கை லட்சுமி என்பவரை திருமணம் செய்திருந்தார். இந்த தம்பதிக்கு பிறந்தவர்தான் நடிகர் நாகசைதன்யா.

amala
amala

பின்னர் லட்சுமியுடன் கருத்து வேறுபாடு ஏற்படவே அவரை விவாகரத்து செய்துவிட்டு 1992ல் அமலாவை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார் நாகார்ஜுனா. இந்த தம்பதிக்கு அகில் என்ற ஒரு மகன் உள்ளார். வளர்ந்து வரும் நடிகரான இவர் தெலுங்கில் ஒருசில படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

அமலா கடைசியாக 1991ல் தமிழில் கற்பூர முல்லை என்ற படத்தில் நாயகியாக நடித்திருந்தார். அதன்பின் தமிழில் இவர் இந்தப்படத்திலும் நடிக்கவில்லை. தற்போது 30 வருடங்களுக்குப் பின் தமிழில் ஒரு படத்தில் இவர் நடித்துவருகிறார். எங்கேயும் எப்போதும் படத்தில் நடித்திருந்த சர்வானந்த் இதில் நாயகனாக நடிக்கிறார்.

ட்ரீம் வாரியர்ஸ் பிச்சர் தமிழ், தெலுங்கில் தயாரிக்கும் இப்படத்தில் ரீது வர்மா நாயகியாக நடிக்கிறார். இதில் அமலா முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடக்சன் பணிகள் நடந்து வருகின்றது. விரைவில் இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story