உங்களுக்கு மொத்தம் எத்தனை புருஷன்கள்?!.. கோபப்படாமல் கூலாக பதில் சொன்ன அம்பிகா...

80களில் தமிழ் சினிமாவில் நுழைந்தவர்தான் அம்பிகா. நடிகை ராதாவின் சகோதரி இவர். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் இவர். மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக தனது கேரியரை துவங்கினார். அதன்பின் மலையாளத்திலேயே கதாநாயகியாகவும் நடிக்க துவங்கினார்.
பாக்கியராஜ் இயக்கிய ‘அந்த ஏழு நாட்கள்’ படம் அவரின் முதல் தமிழ் படமாக அமைந்தது. அதன்பின் ரஜினி, கமல், பிரபு, சத்தியராஜ், சிவாஜி என பலருடனும் பல படங்களில் ஜோடி போட்டு நடித்து பீக்கில் இருந்தார். ரஜினியுடன் நான் சிகப்பு மனிதன், அன்புள்ள ரஜினிகாந்த், எங்கேயோ கேட்ட குரல், மிஸ்டர் பாரத், படிக்காதவன் என பல படங்களிலும் நடித்திருக்கிறார்.
இதையும் படிங்க: ரோமியோவை அன்பே சிவம் ஆக்கிடாதீங்க!.. புளூசட்டமாறன் செஞ்ச வேலையில் கடுப்பான விஜய் ஆண்டனி..
கமலுடன் விக்ரம், சகலகலா வல்லவன், காதல் பரிசு, காக்கி சட்டை, உயர்ந்த உள்ளம், நானும் ஒரு தொழிலாளி உள்ளிட்ட பல படங்களிலும் அம்பிகா நடித்திருக்கிறார். 90களுக்கு பின் இவரின் மார்க்கெட் காணாமல் போனது. எனவே, திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார்.
1988ம் வருடம் பிரேம்குமார் மேனன் என்பவரை திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு 2 மகன்கள் இருக்கிறார்கள். கணவருடன் அமெரிக்காவில் வசித்த அம்பிகா 1996ம் வருடம் கணவரிடமிருந்து விவாகரத்து பெற்றார். அதன்பின் 2000ம் வருடத்தில் நடிகர் ரவிகாந்தை திருமணம் செய்து கொண்டார். ஆனால், 2 வருடத்திலேயே அதுவும் முடிவுக்கு வந்தது.
இதையும் படிங்க: ஒரு வழியா ஓடிடிக்கு வரும் மஞ்சுமெல் பாய்ஸ்!.. எந்த தளத்தில் எந்த தேதியில் வருது தெரியுமா?..
தற்போது அம்பிகா சென்னையில் தனது 2 மகன்களுடன் வசித்து வருகிறார். மேலும், சீரியல் மற்றிம் சினிமாவில் நடித்து வருகிறார். சினிமாவை விட சீரியலில் அதிகமாக நடிக்கும் நடிகையாக மாறிவிட்டார். பாலா இயக்கிய அவன் இவன் படத்தில் கூட விஷாலின் அம்மாவாக கலக்கி இருந்தார்.
சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது ஆங்கர் அவரிடம் ‘உங்களுக்கு எத்தனை கணவன்கள்?’ என கேட்டுவிட்டார். அம்பிகாவோ கோபப்படாமல் ‘அது எத்தனை என நீங்களே கணக்கு போட்டுக்குங்க. ஆனா, நான் இப்ப என் மகன்களுடன் வசித்து வருகிறேன்’ என சிரித்தபடியே சொன்னார் அம்பிகா.