வேலண்டைன்ஸ் டே-வுக்கு இது போதும் செல்லம்!.. அழகா காட்டி அசரவைக்கும் ஆண்ட்ரியா...

Andrea: சினிமாவில் அஸ்கி குரலில் அழகாய் பாடி ரசிகர்களை தன்பக்கம் இழுத்தவர்தான் ஆண்ட்ரியா. இவர் பாடிய பல பாடல்கள் சூப்பர் ஹிட் அடித்தது. சிறு வயது முதலே வெஸ்டர்ன் இசையில் பெரிய பாடகி ஆக வேண்டும். வெளிநாடுகளுக்கெல்லாம் சென்று இசைக்கச்சேரி செய்ய வேண்டும் என்கிற ஆசை ஆண்ட்ரியாவுக்கு இருந்தது.
சினிமாவில் பாட துவங்கினாலும் தற்போது அந்த ஆசையை நிறைவேற்றிக்கொண்டார். அதேபோல், கவுதம் மேனன் இயக்கிய பச்சக்கிளி முத்துச்சரம் படத்தின் மூலம் சினிமாவில் நடிக்கவும் துவங்கினார். இதுவரை 25க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவிட்டார். தமிழ் மொழி மட்டுமில்லாமல் மலையாள படங்களிலும் நடித்திருக்கிறார்.
அதேபோல், சினிமாவில் பல நடிகைகளுக்கு குரலும் கொடுத்திருக்கிறார். அதேபோல், பல நாடுகளுக்கும் சென்று இசைக்கச்சேரிகளை நடத்தி வருகிறார். பல படங்களில் நடித்திருந்தாலும் வடசென்னை, விஸ்வரூபம், அரண்மனை 3 போன்ற படங்களில் இவருக்கு நல்ல வேடங்கள் கிடைத்தது. மிஷ்கினின் இயக்கத்தில் பிசாசு 2 படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.
ஆனால், இந்த படம் இன்னும் வெளியாகாமல் இருக்கிறது. ஒருபக்கம், மாடலிங் துறையிலும் கலக்கும் ஆண்ட்ரியா கவர்ச்சி உடைகளில் கட்டழகை காட்டி தொடர்ந்து போட்டோக்களையும் சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார்.
அந்தவகையில், ஸ்லீவ்லெஸ் உடையில் நச்சென அழகை காட்டி போஸ் கொடுத்து ஆண்ட்ரியா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களுக்கு காதலர் தின விருந்தாக அமைந்துள்ளது.