கையில்லாத ஜாக்கெட்டு கண்ண கட்டுது!.. சண்டே கிளாமர் ட்ரீட் வைக்கும் ஆண்ட்ரியா!...
Andrea: அஸ்கி குரலில் பாடுவும் மிகவும் சொற்பமான பாடகிகளில் ஆண்ட்ரியாவும் ஒருவர். பல பாடகிகள் சினிமாவில் பாடினாலும் ஆண்ட்ரியாவின் குரல் தனியாக தெரியும். குரலில் கிளுகுளுப்பு காட்டி ரசிகர்களை சூடாக்கிவிடுவார். அதுபோல பல பாடல்களை ஆண்ட்ரியா பாடியிருக்கிறார்.
அல்லு அர்ஜூன் நடிப்பில் தெலுங்கில் உருவாகி தமிழில் டப் செய்யப்பட்ட புஷ்பா படத்தில் இடம் பெற்ற ‘ஊ சொல்றியா மாமா’ பாடலை படியது ஆண்ட்ரியாதான். ஒருபக்கம், நடிகையாகவும் சினிமாவில் கலக்கி வருகிறார். இவரை கவுதம் மேனன்தான் நடிகையாக மாற்றினார்.
வட சென்னை, துப்பறிவாளன், அரண்மனை, அரண்மனை 3, தரமணி போன்ற படங்களில் இவருக்கு நல்ல வேடம் கிடைத்தது. இந்த படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் ஆண்ட்ரியா. மிஷ்கினின் இயக்கத்தில் பிசாசு 2 படத்தில் நடித்து முடித்திருக்கிறார். ஆனால், இப்படம் இன்னும் வெளியாகவில்லை.
சினிமாவில் பாடுவது மட்டுமில்லாமல் நடிகைகளுக்கு பின்னணி குரலும் கொடுத்து வருகிறார். மேலும், வெளிநாடுகளுக்கு சென்று இசைக்கச்சேரியும் நடத்தி வருகிறார். அது தொடர்பான போட்டோக்களையும் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். ஒருபக்கம், மாடலிங் துறையிலும் ஆர்வமுள்ள ஆண்ட்ரியா ஹாட்டான உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், கை இல்லாத ஜாக்கெட் அணிந்து போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார் ஆண்ட்ரியா. இந்த புகைப்படங்கள் ரசிகர்களுக்கு சண்டே விருந்தாக அமைந்துவிட்டது.