ஷேப்பான உடம்பு.. ஷேக் ஆட வைக்குது.. பாடி ஷேப்பை காட்டி உறைய வைக்கும் ஆண்ட்ரியா
தமிழ் சினிமாவில் ஒரு முன்னனி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஆண்ட்ரியா. பாடகியாகி அறிமுகமாகி அதன் மூலம் ரசிகர்களை கவர்ந்தாலும் அவருக்குள்ளும் ஒரு நடிகை ஒளிந்திருப்பதை வடசென்னை படத்தின் மூலம் காண முடியும்.
காதலும் திமிரும் ஒன்று சேர்ந்த அந்த கதாபாத்திரத்தில் அற்புதமாக நடித்திருப்பார் ஆண்ட்ரியா. அதனை தொடர்ந்து பல படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அதிலும் குறிப்பாக தரமணி படத்திலும் அவரின் நடிப்பு பாராட்டப்பட்டது.
நடிப்பில் ஆர்வம் வந்தாலும் பாடுவதையும் நிறுத்தவில்லை ஆண்ட்ரியா. வெளி நாட்டிலும் கச்சேரி செய்து கொண்டு வருகிறார். அது சம்பந்தமான பல புகைப்படங்கள் இணையத்தில் வந்து கொண்டுதான் இருக்கின்றன.
இவரின் நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் படமாக மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு 2 திரைப்படம். படவேலைகள் எல்லாம் முடிந்த நிலையிலும் ஏதோ ஒரு காரணத்தால் படம் வெளியாகமலே இருக்கின்றன.
எனினும் அம்மணி வெளி நாட்டில் தான் சுற்றிக் கொண்டு இருக்கிறார். இந்த நிலையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் தன்னுடைய் ஸ்லிம்மான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை ஆச்சரியத்தில் திகைத்திருக்கிறார்.