இது போதுமா?.. இன்னும் கொஞ்சம் வேணுமா?!.. நீச்சல் குளத்தில் மஜா பண்ணும் ஆண்ட்ரியா…

Published on: September 6, 2024
andrea
---Advertisement---

தமிழ் திரையுலகில் பாடகி, பின்னணி குரல் கொடுக்கும் கலைஞர், நடிகை என வலம் வருபவர் ஆண்ட்ரியா. பல நடிகைகளுக்கும் இவர் குரல் கொடுத்திருக்கிறார். வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளியான ஆடுகளம் படத்தில் டாப்சிக்கு குரல் கொடுத்தவர் இவர்தான்.

andrea

மேற்கத்திய இசையில் அதிக ஆர்வம் கொண்டவர். சிறு வயது முதலே இசையை கற்றுகொண்டார். தமிழில் பல திரைப்படங்களில் ஆண்ட்ரியா பாடி இருக்கிறார். புஷ்பா படத்தில் இடம் பெற்று ரசிகர்களை சூடாக்கிய ‘ஊ சொல்றியா மாமா’ பாடல் கூட ஆண்ட்ரியா பாடியதுதான்.

andrea

வட சென்னை, துப்பறிவாளன் ஆகிய படங்களில் அசத்தலாக நடித்திருந்தார். அரண்மனை, அரண்மனை 3 ஆகிய பேய் படங்களிலும் நடித்திருக்கிறார். தமிழ் மட்டுமில்லாமல் மலையாள படங்களிலும் நடித்திருக்கிறார். இவரை பஹத் பாசில் திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டு அவரிடம் கேட்டதாகவும், ஆனால், ஆண்ட்ரியா மறுத்துவிட்டதாகவும் கூட ஒரு செய்தி உண்டு.

andrea
#image_title

தமிழக அரசியல்வாதி ஒருவரின் மகன் தனது வாழ்க்கையில் விளையாடியதாக தனது சுயசரிதை புத்தகத்தில் எழுதி இருக்கிறார். புத்தகம் வாசிக்கும் பழக்கம் கொண்டவர் இவர். மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு 2 என்கிற படத்தில் நடித்து ஒரு வருடத்திற்கும் மேல் ஆகிவிட்டது. ஆனால், அந்த படம் இன்னும் வெளியாகவில்லை.

andrea
#image_title

ஒருபக்கம், வெளிநாடுகளுக்கு போய் இசைக்கச்சேரிகளையும் நடத்தி வருகிறார். அது தொடர்பான போட்ட்டோக்களை தொடர்ந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவார். அதேபோல், மாடலிங் துறையிலும் ஆர்வம் கொண்ட ஆண்ட்ரியா அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களையும் வெளியிடுவார்.

andrea
#image_title

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.