உன்ன பாத்தா கிட்னாப் பண்ண தோணுதே!..அசரடிக்கும் அழகில் ஆண்ட்ரியா....
X
தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமானவர்தான் ஆண்ட்ரியா. கவுதம்மேனன் இயக்கிய பச்சக்கிளி முத்துச்சரம் படம் மூலம் நடிகையாக மாறினார்.
ஆயிரத்தில் ஒருவன், விஸ்வரூபம், விஸ்வரூபம் 2,வட சென்னை, தரமணி, துப்பறிவாளன் ஆகிய படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தான் ஒரு சிறந்த நடிகை என நிரூபித்தார். மாஸ்டர் படத்தில் விஜயுடன் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருந்தார். மிஷ்கினின் இயக்கத்தில் பிசாசு 2 படத்திலும் பேயாக நடித்துள்ளார்.
நடிப்பது மட்டுமில்லாமால் திரைப்படங்களில் பாடுவது, மேடை கச்சேரியில் பாடுவது என பிஸியாக இருந்து வருகிறார். ஒருபக்கம் கிளாமரான உடைகளை அணிந்து இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பகிர்ந்து அசரடித்து வருகிறார்.
இந்நிலையில், புடவையில் மிகவும் அழகாக போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது.
Next Story