இரவில் அந்த நடிகருடன் செம ஜாலி...உண்மையை போட்டு உடைத்த ஆண்ட்ரியா...
பின்னணி குரல் கொடுப்பவர்,பாடகி, நடிகை என வலம் வருபவர் ஆண்ட்ரியா. கிளுகிளுப்பு குரலில் இசை ரசிகர்களுக்கு கிளர்ச்சியை ஏற்படுத்தும் காந்த குரலை உடையவர். புஷ்பா படத்தில் அவர் பாடிய ‘ஊ சொல்றியா மாமா’ பாடல் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.
பாடகியாக இருந்த இவரை கவுதம் மேனன் நடிகையாக மாற்றினார். சரத்குமார் நடித்த ‘பச்சக்கிளி முத்துச்சரம்’ படத்தில் அறிமுகமானார். அதன் பல திரைப்படங்களில் நடித்தாலும் விஸ்வரூபம், விஸ்வரூபம் 2, வட சென்னை, துப்பறிவாளன் ஆகிய படங்களில் அவருக்கு நல்ல வேடம் கிடைத்தது.
தற்போது, சிபிராஜுடன் வட்டம் என்கிற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை மதுபானக்கடை இயக்கிய கமலக்கண்ணன் இயக்கியுள்ளார்.
இது ஒரு திரில்லர் படமாக உருவாகி வருகிறது. இப்படம் பற்றி சமீபத்தில் பேசிய ஆண்ட்ரியா ‘சிபி மிகவும் கூலான ஒரு மனிதர். அவருடன் நடித்தது ஒரு மகிழ்ச்சியான அனுபவம். ஷூட்டிங் சமயத்தில் இரவில் அவருடன் காரில் ஊர் சுற்றி கையேந்தி பவனில் எல்லாம் சாப்பிட்டது வித்தியாசமான அனுபவமாக இருந்தது’ என ஆண்ட்ரியா தெரிவித்துள்ளார்.
இப்படம் வருகிற 29ம் தேதி ஓடிடியில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.