எங்கிட்டு போனாலும் முட்டுச்சந்தா இருக்கே? அஞ்சலியின் 50 வது படத்திற்கு இப்படி ஒரு சோதனையா?
தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத நடிகையாக இருப்பவர் நடிகை அஞ்சலி. ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட அஞ்சலி தெலுங்கு தமிழ் போன்ற மொழி படங்களில் நடித்து வருகிறார். தமிழில் அங்காடி தெரு என்ற திரைப்படத்தில் கனியாக நடித்து சிறந்த நடிகைக்கான விருதை பெற்றார்.
கற்றது தமிழ் என்ற திரைப்படத்தின் மூலம் முதன் முதலில் தமிழில் அறிமுகமான அஞ்சலி பல விளம்பர படங்களிலும் நடித்திருக்கிறார். படம் தான் அவரை ஒரு தேடப்படும் நடிகையாக மாற்றியது. இந்தப் படத்திற்கு பிறகு தான் சினிமாவில் ஒரு இளம் நடிகையாக அறியப்பட்டார் அஞ்சலி.
எதார்த்தமான நடிப்பு பக்கத்தில் வீட்டுப் பெண் போன்ற தோற்றம் போன்றவைகளால் தேவையான கதாபாத்திரங்களுக்கு தேவையான வேடங்களுக்கு பொருத்தமாகவும் கருதப்பட்டார். ஆனால் இடையிலேயே சில பல சொந்த பிரச்சினைகளால் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார் அஞ்சலி.
அதன் பிறகு நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் தன் திறமையை காட்ட வந்திருக்கிறார். ஆனால் தெலுங்கில் தான் அவருக்கு ஒரு சரியான கம் பேக் அமைந்தது. தெலுங்கில் வெற்றி பெற்ற பல படங்களில் அஞ்சலி நடித்திருந்தார். அதன் காரணமாக தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக அஞ்சலி திகழ காரணமானது.
நிலையில் சமீபத்தில் ஈகை என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் அஞ்சலி அந்தப் படத்தின் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஏனெனில் அந்த படத்தின் கதை இதுவரை இல்லாத கதை என்றும் அஞ்சலிக்கும் மிகவும் பிடித்தமான கதையாக இருப்பதால் இந்த படத்தின் மீது அஞ்சலி பெரும் எதிர்பார்ப்பில் இருக்கிறார்.
ஆனால் இந்த படம் 4 தயாரிப்பாளர்கள் நிறுவனத்தில் மாறி மாறி போயிருக்கிறது. ஒரு தயாரிப்பு நிறுவனம் படத்தின் கதையை கேட்டு தயாரிக்க முன்வருவார்களாம். அதன் பிறகு ஏதோ ஒரு காரணத்தால் வேண்டாம் என்று சொல்லி கை மாறி இருக்கிறது. இனிமேல் இவர்களை நம்பினால் சரி வராது என்ற காரணத்தால் தனக்குத் தெரிந்த நண்பர்களை வைத்து படத்தை தயாரிக்க வைத்திருக்கிறாராம். இதற்கு ஒரே காரணம் இந்த பட த்தின் கதை மீதான ஒரு ஈர்ப்புதான் என்று கூறுகிறார்கள்.
இதையும் படிங்க : என்னது விஜயகாந்துக்கு தம்பியா? பிச்சுக்கிட்டு போன கூட்டம்! ஒரே நாளில் பிரபலமான நடிகர்