ஒன்னா இருந்தோம்! அதுக்கப்புறம் கண்டுக்கவே இல்ல.. அஞ்சலி இப்படிப்பட்டவரா?

by Rohini |   ( Updated:2024-01-25 08:22:09  )
anjali
X

anjali

Actor Anjali: தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை அஞ்சலி. இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர். கற்றது தமிழ் என்ற படத்தின் மூலம் அறிமுகமான அஞ்சலியை மேலும் பிரபலமாக்கிய திரைப்படமாக அங்காடித்தெரு படம் அமைந்தது. அந்த படத்தில் அவரின் எதார்த்தமான நடிப்பு அனைவரையும் கவர்ந்தது.

அங்காடித்தெரு படம் யாரும் எதிர்பாராத ஒரு வெற்றியை பெற்றுத்தந்தது. சென்னைக்கு வேலைக்காக வெளியூரில் இருந்து வரும் இளைஞர்கள் மற்றும் இளைஞிகள் படும் கஷ்டத்தை மையப்படுத்தி வெளிவந்த படம்தான் அங்காடித்தெரு. சூப்பர் டூப்பர் ஹிட்டானது. அந்தப் படத்தின் வெற்றி அடுத்தடுத்து அஞ்சலிக்கு மிகப்பெரிய வாய்ப்புகளை பெற்றுக் கொடுத்தது.

இதையும் படிங்க: கிரிக்கெட்டை வைத்து அரசியல் பேசும் ப்ளூ ஸ்டார்!.. பாக்ஸ் ஆபிஸில் கல்லா கட்டுமா?.. விமர்சனம் இதோ!..

இப்போது வெப் சீரிஸிலும் கலக்கி வருகிறார். இந்த நிலையில் பிரபல நகைச்சுவை நடிகரான ப்ளாக் பாண்டி அஞ்சலியை பற்றி அவருடைய கருத்தை ஒரு பேட்டியின் மூலம் கூறினார். அங்காடித்தெரு படத்தில் அஞ்சலியும் ப்ளாக் பாண்டியும் நடித்திருப்பார்கள். ஆனால் அந்தப் படத்திற்கு முன்பே அஞ்சலியும் ப்ளாக் பாண்டியும் நல்ல நண்பர்களாம்.

அதுவும் வாடி போடி என கூப்பிடும் அளவுக்கு தோழியாம் அஞ்சலி. ஒரு டான்ஸ் பள்ளியில் இருவரும் ஒன்றாக படித்தார்களாம். அங்கு நிறைய நேரம் இருவரும் செலவழித்திருக்கிறார்களாம். அங்காடித்தெரு படத்திற்கு பிறகு ஜெயம் ரவியின் சகலாகலாவல்லவன் திரைப்படத்தில் தான் அஞ்சலியை மீண்டும் ப்ளாக் பாண்டி பார்த்தாராம்.

இதையும் படிங்க: மனசுல கருத்து கந்தசாமின்னு நினைப்பு!.. பில்டப் எல்லாம் புஸ்ஸா போச்சு.. சிங்கப்பூர் சலூன் விமர்சனம்!..

ஆனால் அப்போது ப்ளாக் பாண்டியிடம் அஞ்சலி சரியாக பேசவில்லையாம். இருந்தாலும் அஞ்சலியிடம் ப்ளாக் பாண்டி ‘ நான் எதுவும் தவறு செய்துவிட்டேனா? எதுவும் தவறாக பேசிவிட்டேனா? ஏன் சரியா பேச மாட்ற?’ என்றெல்லாம் கேட்டாராம். ஆனால் அஞ்சலி கொஞ்சம் விலகித்தான் போனாராம். இது குறித்து மேலும் பேசிய ப்ளாக் பாண்டி சரி அவரவர் சுதந்திரம் என ஒன்று இருக்கிறது. அதை நாம் தடுக்க கூடாது என்கிற காரணத்தால் இதை பற்றி மேலும் அஞ்சலியிடம் நான் பேசவில்லை என ப்ளாக் பாண்டி கூறினார்.

Next Story