வயித்துவலினு சொல்லி கூட்டிட்டு போனான்! படப்பிடிப்பில் அஞ்சலியுடன் எஸ்கேப் ஆன நடிகர்
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை அஞ்சலி. தமிழில் கற்றது தமிழ் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். ஒரு அற்புதமான நடிகையாக திகழப்பட்டார் அஞ்சலி. மிகவும் எதார்த்தமாக நடிக்கக் கூடிய நடிகையும் கூட. வந்த குறுகிய காலத்திலேயே ரசிகர்களின் மனதை ஆழமாக பிடித்துக் கொண்டார்.
தன் குடும்பத்தில் ஒருவராகவே அஞ்சலியை ரசிகர்கள் பார்க்கத் தொடங்கினார்கள். அங்காடித்தெரு படம் அஞ்சலிக்கு ஒரு பிரேக்கிங் பாயிண்டாக அமைந்தது. அவர் அங்காடி தெரு மற்றும் எங்கேயும் எப்போதும் திரைப்படங்களில் நடித்ததற்காக, சிறந்த நடிகைக்கான ஃபிலிம்பேர் விருதை வென்றார். தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழித்திரைப்படங்களிலும் நடித்தார்.
இதையும் படிங்க : கடன் வாங்கியதால் ஜப்திக்கு போன வீடு!.. எம்.ஜி.ஆர் சந்தித்த சோதனை!.. எல்லாமே அந்த படத்துக்காக!…
இந்த நிலையில் இரண்டெழுத்து நடிகருடன் அஞ்சலி கிசுகிசுக்கப்பட்டார். இருவருக்கும் இடையில் காதல் இருப்பதாகவும் அப்போதைய பத்திரிக்கைகள் எழுதி வந்தனர். இருவரும் இணைந்து நடித்த ஒரு படப்பிடிப்பில் கூட அந்த நடிகர் அஞ்சலியிடம் வயிறு வலிப்பதாக நாடகம் போடு என்று சொன்னாராம். அதே போல் அஞ்சலியும் திடீரென வயிறு வலிக்கிறது என்று சொல்ல அருகில் இருந்தவர்கள் காரை எடுத்து வர முயற்சி செய்திருக்கிறார்கள்.
அதற்கு அந்த நடிகர் நானே மருத்துவமனைக்கு அழைத்துக் கொண்டு செல்கிறேன் என்று சொல்லிவிட்டு இருவரும் எங்கு தான் போனார்கள் என்று தெரியவில்லையாம். அன்று முழுவதும் படப்பிடிப்பு ரத்தாகி விட்டதாம். அடுத்த நாள் காலையில்தான் வந்தார்களாம். அதே போல் அதே படப்பிடிப்பிற்காக ஒரு ஹோட்டலில் அறை எடுத்துக் கொடுத்திருக்கிறார்கள்.
இதையும் படிங்க : விஜயின் அரசியல் எங்கு ஆரம்பிச்சது தெரியுமா? அப்பவே சிம்மாசனம் போட்டு உட்கார வச்சது இவர்தானாம்
அந்த நடிகரின் அறை எப்போதும் பூட்டிதான் இருக்குமாம். அஞ்சலியின் அறையில் தான் இருப்பாராம். இப்படி இவர்கள் இருவரின் அட்டகாசமும் தொடர் அஞ்சலி வேறொரு நடிகரின் படத்தில் கமிட் ஆக அங்கு இந்த இரண்டெழுத்து நடிகர் குடித்து விட்டு ரகளை செய்தாராம். அந்தப் படத்தின் இயக்குனரின் மீதே கைவைத்து விட்டாராம். இனிமேல் பொறுத்துக் கொள்ள முடியாது என்ற காரணத்தினால் தான் அஞ்சலி அந்த நடிகரை பிரிந்து சென்றாராம். இந்த செய்தியை பிரபல திரைவிமர்சகர் வித்தகன் சேகர் கூறினார்.