இவ்வளவு நாள் எங்க போன செல்லம்!.. விதவிதமா காட்டி அசரவைக்கும் அஞ்சலி!.. இது செம போட்டோஸ்!..
ஆந்திராவை சேர்ந்தவர் அஞ்சலி. ஆனால், கல்லூரி படிப்பை முடித்தது எல்லாம் சென்னையில்தான். கல்லூரி படிப்புக்கு பின் நடிப்பின் மீது ஆர்வம் ஏற்பட்டு சில குறும்படங்களில் நடித்தார். அப்படியே சினிமாவிலும் நுழைந்தார். 2 தெலுங்கு படங்களில் நடித்த பின்னர்தான் தமிழுக்கு வந்தார் அஞ்சலி.
ராம் இயக்கிய ‘கற்றது தமிழ்’ படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். அதன்பின் தொடர்ந்து பல தமிழ் படங்களிலும் நடித்தார். நடிகர் ஜெய்யுடன் இவருக்கு காதல் இருப்பதாக கிசுகிசுக்கள் வெளியானது.
ஆனால், ஒரு கட்டத்தில் அது பிரேக்கப்பில் முடிந்ததாக சொல்லப்பட்டது. தமிழ் மட்டுமில்லாமல் நிறைய தெலுங்கு படங்களிலும் அஞ்சலி நடித்திருக்கிறார். வசந்தபாலன் இயக்கத்தில் நடித்த ‘அங்காடித்தெரு’ திரைப்படம் அஞ்சலிக்கு ஒரு முக்கிய படமாக அமைந்தது. மேலும், ராம் இயக்கத்தில் மீண்டும் அவர் நடித்த தரமணி, பேராண்மை போன்ற படங்களிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.
விஜய், அஜித் போன்ற நடிகர்களுடன் ஜோடி போட்டு நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் விஜய் சேதுபதியுடன் சிந்துபாத் படத்தில் நடித்தார். சிங்கம் 2 படத்தில் சூர்யாவுடன் ஒரு பாடலுக்கு நடனமாடினார். தெலுங்கிலும் ஒரு பாடலுக்கு நடனமாடி வருகிறார். ஒருபக்கம், அழகை விதவிதமாக காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், அசத்தலான உடையில் அழகை காட்டி அஞ்சலி வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்கள் அவரின் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்திருக்கிறது.