ஐயோ இத பாக்க ரெண்டு கண்ணும் பத்தாது!.. மாராப்பை விலக்கி அழகை காட்டும் அஞ்சலி!.
Anjali: ஆந்திராவில் பிறந்து வளரந்தாலும் படிப்புக்காக தமிழ்நாட்டுக்கு வந்தவர் நடிகை அஞ்சலி. கல்லூரி படிப்புக்கு பின் நடிப்பின் மீது ஆர்வம் ஏற்பட்டு குறும்படங்களில் நடிக்க துவங்கியவர் இவர். இயக்குனர் களஞ்சியம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். களஞ்சியத்துடன் 3 படங்களில் அஞ்சலி நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், ஒரு படமும் சரியாக எடுக்கப்படவில்லை.
அதன்பின் ஆந்திரா போய் ஒரு தெலுங்கு படத்தில் நடித்தார். அதன்பின் பாலுமகேந்திராவின் உதவியாளர் ராம் இயக்கிய கற்றது தமிழ் படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். அதேபோல், வசந்த பாலன் இயக்கத்தில் வெளிவந்த அங்காடித்தெரு படமும் அஞ்சலிக்கு நல்ல பெயரை வாங்கி தந்தது.
அதன்பின் பல திரைப்படங்களிலும் அஞ்சலி நடித்தார். இடையிடையே தெலுங்கு படங்களில் நடித்தார். தமிழில் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தாலும் கற்றது தமிழ், அங்காடித்தெரு, எங்கேயும் எப்போதும் ஆகிய படங்களை போல அதன்பின் அஞ்சலிக்கு படங்கள் எதுவும் அமையவில்லை. எனவே, கிடைக்கும் வேடங்களில் நடித்து வருகிறார்.
சமீபகாலமாக தெலுங்கு படங்களில் அதிகம் நடித்து வருகிறார் அஞ்சலி. நாடோடிகள் 2 படத்திற்கு பின் கடந்த 4 வருடங்களாக அஞ்சலியை திரையில் பார்க்க முடியவில்லை. ஆனால், சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்தவகையில், சிவப்பு நிற புடவையும், கவர்ச்சி ஜாக்கெட்டும் அணிந்து கொஞ்சம் கிளுகிளுப்பாக போஸ் கொடுத்து அஞ்சலி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் அவரின் ரசிகர்களை ஜில்லாக்கி இருக்கிறது.