லைஃபையே புரட்டி போடுறது இதுதான்.. மீனாவுடன் சேர்ந்து ‘தேவர் மகன்’ படத்தை மிஸ் பண்ண நடிகை

thevar-magan
Devar Magan: கமல் நடித்த திரைப்படங்களில் நல்ல ஒரு திரை கதையை கொண்டிருந்த திரைப்படமாக தேவர்மகன் திரைப்படம் அமைந்தது. 1992 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில் கமல் தான் திரைக்கதையை உருவாக்கி இருந்தார். இந்த படத்தின் திரைக்கதையை கமல் ஒரு திரைக்கதை மென்பொருளை பயன்படுத்தி எழுதி இருந்தார். இந்திய படங்களில் இதுதான் முதல் முயற்சியாக பார்க்கப்பட்டது.
மக்கள் அவரை இந்திய சினிமாவின் புதுமைப்பித்தன் என்று அழைப்பதில் எந்த ஒரு ஆச்சரியமும் இல்லை. படத்தில் ஹீரோயினாக ரேவதி நடித்திருப்பார். ரேவதியின் முகத்தில் கிராமத்து மண்வாசனை உடன் கூடிய ஒரு முகத்தோற்றம் தோன்றியிருந்தது. திருமணத்தின் போது ஒரு கோழையான கதாபாத்திரமாக ரேவதியின் கதாபாத்திரம் இருக்க வேண்டும். அதை சரியாக பயன்படுத்திக் கொண்டார் ரேவதி .
முதலில் இந்த படத்தில் சிவாஜிக்கு பதிலாக ஜெமினி கணேசன் தான் நடிப்பதாக இருந்தது. ஏனெனில் அந்த நேரத்தில் சிவாஜி கணேசனின் உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. இருப்பினும் இந்த திரைக்கதையின் மீது ஈர்க்கப்பட்டு சிவாஜி குணமடைந்த பிறகு அந்த படத்தில் நடித்தார். இந்தப் படத்தில் ஒரு சிறந்த பாடலாக அமைந்தது இஞ்சி இடுப்பழகி பாடல். இளையராஜா இசையில் இந்தப் பாடல் பெரும் வரவேற்பை பெற்றது.
ஐந்து தேசிய விருதுகளை இந்த படம் பெற்றுக் கொடுத்தது. இந்த நிலையில் ரேவதி நடிக்க இருந்த கதாபாத்திரத்தில் முதலில் நடித்தது மீனாதான். இருந்தாலும் மீனாவின் லுக்கில் கிராமத்து சாயல் இல்லாமல் இருந்ததினால் மீனா இந்த படத்தில் இருந்து நீக்கப்பட்டு அதன் பிறகு தான் ரேவதி இந்த படத்திற்குள் வந்தார். இதில் இன்னொரு விஷயம் என்னவெனில் நடிகை அஞ்சுவும் இந்த படத்தில் ஒப்பந்தமாகி அதன் பிறகு விலகி இருக்கிறார்.

குழந்தை நட்சத்திரமாக அஞ்சலி படத்தில் நடித்திருப்பார் அஞ்சு. அதன் பிறகு பல படங்களில் நடித்து மக்கள் மனதில் நல்ல ஒரு வரவேற்பை பெற்றவர். இந்த படத்திற்காக போட்டோ ஷூட் எல்லாம் நடத்தி கால்ஷீட்டும் கொடுத்து அடுத்த மாதம் படப்பிடிப்பிற்காக கிளம்ப வேண்டியதாம் அஞ்சு. அதன் பிறகு திடீரென ரேவதி இந்த படத்தில் கமிட்டாகி விட்டார் என விஷயம் தெரிந்திருக்கிறது. இந்த படத்தில் நடித்திருந்தால் என்னுடைய கேரியரே மாறி இருக்கும் என ஃபீல் பண்ணி பேசி இருக்கிறார் நடிகை அஞ்சு.