More
Categories: Cinema News latest news

நீங்க இடம் கொடுக்குறதால தான் அட்ஜென்ஸ்மெண்டுக்கு கூப்பிடுறாங்க…! நடிகைகளை வெளுத்து வாங்கும் 90-களின் கவர்ச்சிநாயகி….

தமிழ் சினிமாவை பொறுத்தவரைக்கும் அநேகமாக பேசப்படும் பிரச்சினைகளில் ஒன்று அட்ஜெஸ்ட்மெண்ட். சினிமாவில் பிரகாசிக்க விரும்பும் நடிகைகள் எத்தனையோ கனவுகளோடு வந்து வாய்ப்பிற்காக அங்குமிங்குமாக அலைவதை நிறைய மீடியாக்களில் பேட்டிகளின் மூலம் கண்டிருக்கிறோம்.

Advertising
Advertising

ஏன் நல்ல நட்சத்திர அந்தஸ்தை எட்டியவர்கள் கூட அட்ஜெஸ்மெண்ட் பண்ணி தான் இந்த இடத்தை அடைந்திருக்கிறேன் என்று கூறும் நடிகைகளை கூட பார்த்திருக்கிறோம். இது இப்பொழுது இல்லை காலங்காலமாக நடைபெற்று வரும் பிரச்சினையாகவே இருக்கின்றது. மேலும் கூட நடிக்கும் சக கலைஞரிடமும் பாலியல் தொல்லை தரும் சில சம்பவங்களையும் அறிந்திருக்கிறோம்.

இப்படி இருக்கையில் 90-களில் கனவுக்கன்னியாக கவர்ச்சி நாயகியாக அநேக படங்களில் கேரக்டர் கதாபாத்திரங்களில் க்ளாமரையும் தூக்கலாக காட்டிய நடிகை அனுஜா ரெட்டி இது வரைக்கும் என்னிடம் யாரும் வந்து அப்படி கேட்டது இல்லை என்று நம்ப முடியாத தகவலை பகிர்ந்துள்ளார். அதுமட்டுமில்லாமல் யாரெல்லாம் அட்ஜெஸ்மெண்ட் -னு புகார் செய்கிறார்களோ அவர்களையும் நீங்கள் இடம் கொடுக்காமலா அவர்கள் வருகிறார்கள் என சாடியிருக்கிறார்.

குறிப்பாக சொல்லவேண்டுமென்றால் கவுண்டமணி காமெடி சாயங்காலம் 6 மணிக்கு மேல கண்ணு தெரியாது சீனில் மனைவியாக நடித்திருப்பவர் தான் நடிகை அனுஜா ரெட்டி. நிறைய கவர்ச்சி நடனம் ஆடியிருக்கிறார். க்ளாமரை கூலாக காட்டக்கூடியவர். தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் முன்னனி நடிகையாக இருந்திருக்கிறார். இவர் தான் நீங்கள் இடம் கொடுக்காமல் இருங்கள். யாரும் கிட்ட வர மாட்டாங்க. நிறைய நடிகைகள் சொல்றத நான் கேட்டிருக்கிறேன். யாரிடமும் அளவுக்கதிமாக பேசாமல் போன வேலையை மட்டும் ஒழுங்கா செய்து வந்தாலே போதும் . இந்த மாதிரி பிரச்சினைகள் எல்லாம் வராது என கூறியிருக்கிறார்.

Published by
Rohini