Categories: latest news

பெரிய இயக்குனர்! அவர் இப்படி பண்ணுவாருனு நினைக்கல.. அட்ஜெஸ்ட்மெண்ட் குறித்து போட்டுடைத்த நடிகை

Actress Anuja: சினிமா மட்டுமல்லாமல் பல்வேறு துறைகளில் பெண்களுக்கு நடக்கப்படும் கொடுமைகள் ஏராளம். ஒரு பெண் தனியாக நின்று ஜெயிக்க வேண்டும் என்றால் அவள் பல்வேறு போராட்டங்களையும் கஷ்டங்களையும் தாண்டி வந்து தான் அவர் கொண்ட லட்சியத்தை அடைய முடியும். பெண்கள் பெரிதும் பாதிக்கப்படுவது அட்ஜஸ்ட்மென்ட் என்ற ஒற்றை வார்த்தையினால் தான்.

அது எந்த துறை ஆகட்டும் இதுக்கு ஓகே என்றால் உங்களுக்கு கிடைக்க வேண்டியது கிடைக்கும் என்ற ஒரு கண்டிஷன் தான் முதன் முதலில் ஒவ்வொரு பெண் முன்னாடி வைக்கப்படும் ஆஃபர். தன் குடும்ப சூழ்நிலையையும் வறுமையையும் காரணம் காட்டி சில பெண்கள் அதில் விழுந்து விடுகின்றனர். சில பெண்கள் இப்படி இருந்தால்தான் அந்த லட்சியத்தை அடைய முடியும் என்றால் வேண்டவே வேண்டாம் என்று ஒதுங்கி விடுகின்றனர்.

இதையும் படிங்க: விஜய் வேஷத்தை எனக்கு கொடுங்க!.. சண்டை போட்டு படத்திலிருந்து வெளியேறிய அஜித்!..

அதிலும் சினிமாவில் எப்படியாவது ஒரு முன்னணி ஹீரோயின் ஆக வேண்டும் என்ற ஆசையில் வரும் ஒவ்வொரு நடிகைகளும் இந்த அட்ஜஸ்ட்மெண்டை கடந்து தான் வருகிறார்கள். இயக்குனர் தயாரிப்பாளர் ஏன் சின்ன சின்ன டெக்னீசியன்கள் கூட படத்தில் நடிக்க வரும் நடிகைகளை இதில் சிக்க வைத்து விடுகின்றனர். அந்த வகையில் 90 கள் காலகட்டத்தில் ஐட்டம் பாடலுக்கு நடனமாடி மக்கள் மத்தியில் மிகப் பிரபலமானவர் அனுஜா.

இவர் ஒரு சில படங்களில் கவுண்டமணிக்கு ஜோடியாகவும் நடித்திருக்கிறார். விஜய்யுடன் சேர்ந்து ஒரு ஐட்டம் பாடலுக்கும் ஆடியிருக்கிறார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு கன்னடம் போன்ற மொழி படங்களிலும் இவர் அதிகமாக நடித்திருக்கிறார். மலையாள படத்தில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருக்கிறாராம். அது மட்டும் அல்லாமல் மலையாளத்தில் நடிக்க வேண்டும் என்றால் இவருக்கு கொஞ்சம் பயம் இருந்ததாம்.

இதையும் படிங்க: இப்படி இருந்தா ஏங்கி போயிடுவோம்!.. கை இல்லாத ஜாக்கெட்டில் சூடேத்தும் கீர்த்தி சுரேஷ்…

ஏனெனில் அங்கு தான் அந்த மாதிரி படங்கள் எல்லாம் எடுப்பார்கள். அதனால் நாமும் அந்த வளையத்திற்குள் சிக்கிவிடக்கூடாது என்பதில் மிக கவனமாக இருந்திருக்கிறார். இருந்தாலும் ஒரு பெரிய நடிகரின் படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடிக்கக்கூடிய வாய்ப்பு அனுஜாவுக்கு வந்திருக்கிறது. அந்த படத்தை எடுத்தவர் மிகப் பெரிய இயக்குனராம். பிரபலமான இயக்குனரும் கூட.

அவர் அனுஜாவிடம் அட்ஜஸ்ட்மெண்ட் குறித்து பேசி இருக்கிறார். ஓகே சொன்னால் நீ இந்த படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடிப்பாய் என கேட்டிருக்கிறார். ஆனால் அனுஜா முடியவே முடியாது என மறுத்துவிட்டாராம். அதன் பிறகு அந்த கதாபாத்திரத்திற்கு எத்தனையோ நடிகைகளை தேடி இருக்கிறார்கள். யாருமே செட்டாகவில்லையாம். திரும்பவும் அனுஜாவிடமும் வந்து கேட்க இவர் முடியாது என சொல்லி மறுத்துவிட்டாராம்.

இதையும் படிங்க: 80ஸ் தான் தமிழ்சினிமாவின் பொற்காலம்… அதுக்கு இந்த ஒரு காரணமே போதும்..!

Rohini

Recent Posts

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

7 hours ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

8 hours ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

8 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

9 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

15 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

16 hours ago