நான் பட்ட பாடு இருக்கே?.. எம்ஜிஆர் மட்டும் இல்லைனா? அட்ஜெஸ்ட்மெண்ட் பற்றி நடிகை ஓபன் டாக்..
தமிழ் சினிமாவில் சில்கிற்கு பிறகு அவரது இடத்தை பிடித்தவர் நடிகை அனுராதா. சில்க் இருக்கும் போதே அனுராதா வந்தாலும் அவரது மார்கெட் சில்க் அப்புறம் தான் உயரத் தொடங்கியது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் ஒரு கலக்கு கலக்கி வந்தவர் தான் அனுராதா.
சுலோச்சனா என்ற தன் பெயரை சினிமாவிற்காக அனுராதா என்று மாற்றிக் கொண்டார். எல்லா நடிகைகளை போலவே அனுராதாவையும் சில பேர் அட்ஜெஸ்ட்மெண்ட் என்று கேட்டு வந்திருக்கின்றனராம். ஆனாலும் அவரது பெற்றோர்கள் சினிமாவில் மிகவும் நெருக்கமானவர்கள் என்பதால் அது எல்லை மீறி போகவில்லை என்றும் கூறியிருக்கிறார்.
ஆனால் ஒரு உதவி இயக்குனர் அவரிடம் வந்து காதலை சொன்னாராம். ஆனால் அந்த நேரத்தில் அனுராதாவிற்கு எந்த ஒரு உடன்பாடும் இல்லையென்பதால் அதை மறுத்து விட்டாராம். இப்பொழுது அந்த உதவி இயக்குனர் உலகமே கொண்டாடக்கூடிய சிறந்த இயக்குனராக திகழ்ந்து வருகிறார் என்று கூறினார்.
அனுராதா தன் கூட ஆடிய நண்பரான சதீஷ் என்பவருடன் நண்பராக பழகியதை அவரது பெற்றோர்கள் கண்டித்ததால் நண்பராக பழகியதை இப்படி எதிர்க்கிறார்களே என்ற ஒரு காரணத்திற்காக ஆத்திரத்தில் அவரையே திருமணம் செய்து கொண்டாராம். ஆனால் அவர்கள் திருமணம் வாழ்க்கை 9 வருடம் மகிழ்ச்சியாக கழிந்திருக்கிறது. அதன் பின் ஒரு விபத்தில் அவரது கணவர் சிக்கி கிட்டத்தட்ட 11 வருடங்கள் ஒரு குழந்தை போலவே மாறிவிட்டாராம். ஏதோ நரம்புகள் பிரச்சினையால் குழந்தை தனமாக பக்குவத்திற்கு மாறிவிட்டாராம். 11 வருடம் கழித்து மரணமடைந்து விட்டாராம்.
அதன் பின் குழந்தைகளுக்காக மறு கல்யாணம் செய்யாமல் குடும்பத்தை இனிதே கழித்து வருகிறார் அனுராதா. அவர் ஒரு பேட்டியில் கூறும்போது அட்ஜெஸ்ட்மெண்ட் பற்றி சொல்லும் போது 80களில் படுபிஸியாக இருந்த நடிகை தான் அனுராதா. அப்போது அரசியலில் பிரபலமான அமைச்சரால் அவருக்கு ஏகப்பட்ட டார்ச்சர் வந்து கொண்டிருந்ததாம்.
இதையும் படிங்க : லோகேஷ் கனகராஜ் செய்த காரியத்தால் இந்தியாவில் இருந்தே காணாமல் போன திரைப்படம்… அப்போ அது உண்மைதானோ?
அதனால் தாங்க முடியாத அனுராதாவின் பெற்றோர் அனுராதாவையும் அழைத்துக் கொண்டு போய் எம்ஜிஆரிடம் விஷயத்தை கூறினார்களாம். அவர் தலையிட்டு தான் அந்த அமைச்சரை அடக்கினாராம் எம்ஜிஆர். இதை ஒரு பேட்டியில் அனுராதா கூறினார்.