
Entertainment News
வாய்ப்புக்காக இப்படியெல்லாம் போஸ் கொடுத்தாரா அனுஷ்கா!….ஆடிப்போன ரசிகர்கள்…
தமிழ் சினிமாவில் சுந்தர் சி இயக்கிய ரெண்டு திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகை அனுஷ்கா. ஆனால், தமிழில் அவருக்கு தொடர் வாய்ப்புகள் அமையவில்லை. எனவே, தெலுங்கு திரைப்படங்களில் கவனம் செலுத்தினார். அங்கு மகேஷ்பாபு உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.
குறிப்பாக அவர் நடித்த ‘அருந்ததி’ தெலுங்கு திரைப்படம் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாகி தமிழ் சினிமா ரசிகர்களையும் கவர்ந்தது. தமிழிலும் அவருக்கு ஒரு மார்க்கெட் உருவானது. தொடர்ந்து விஜய், விக்ரம் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்தார்.
குறிப்பாக சூர்யாவுடன் அவர் நடித்த சிங்கம், சிங்கம் 2, சிங்கம் 3 படங்கள் ரசிகர்களிடம் வெற்றி பெற்றது. எல்லாவற்றையும் விட ராஜமவுலி இயக்கத்தில் அவர் நடித்த ‘பாகுபலி’ திரைப்படம் இந்தியா முழுவதும் அவரை பிரபலப்படுத்தியது. தற்போது அவருக்கு வாய்ப்புகள் ஏதுமில்லை.
இந்நிலையில், அவர் சினிமாவில் வாய்ப்பு தேடிய போது கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை அதிர வைத்துள்ளது.