அச்சச்சோ.. அனுஷ்காவுக்கு இந்த வியாதியா?.. பரிதாபத்தில் சினிமா உலகம்!..
தமிழ் சினிமாவில் முன்னனி நடிகையாக வலம் வந்தவர் நடிகை அனுஷ்கா. தமிழில் ரஜினி, விஜய், அஜித், விக்ரம், சூர்யா, கார்த்தி என அனைத்து முன்னனி நடிகர்களுடனும் ஜோடியாக நடித்து மக்கள் மனதில் நல்ல வரவேற்பை பெற்றவர்.
ஏகப்பட்ட ஹிட் படங்களில் நடித்து முன்னனி அந்தஸ்தை பெற்றவர். பாகுபாலி படத்தின் மூலம் உச்சம் பெற்ற நடிகையாக பேர் வாங்கிய அனுஷ்காவிற்கு பாகுபாலி படத்திற்கு பிறகு அந்த பட வாய்ப்புகளும் வரவில்லை. தெலுங்கு சினிமா உலகிலும் முன்னனி நடிகையாக வலம் வருகிறார்.
நீண்ட நாள்களுக்கு பிறகு மாதவனுடன் காது கேளாத வாய் பேச முடியாத கதாபாத்திரத்தில் சைலன்ஸ் திரைப்படத்தில் நடித்தார். ஆனால் அந்தப் படமும் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. அதன் பிறகு சில ஆண்டுகள் படவாய்ப்புகள் இல்லாமல் தவித்து வந்தார் அனுஷ்கா.
இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் அனுஷ்காவிற்கு ஒர் புதிய வகை நோய் இருப்பதாக கூறியிருக்கிறார். சிரிக்கும் நோயாம். அதாவது ஒரு தடவை சிரிக்க ஆரம்பித்தால் கிட்டத்தட்ட 15 நிமிடத்தில் இருந்து 20 நிமிடம் வரை தொடர்ந்து சிரித்துக் கொண்டே இருப்பாராம்.
இதை தான் சிரிப்பு வியாதி என்று கூறியுள்ளார். இதனால் சில சமயங்களில் படப்பிடிப்புகளும்ன் நின்று போயிருக்கிறது என்று கூறியிருக்கிறார். தொடர்ந்து 20 நிமிடம் விடாமல் சிரிப்பதால் படப்பிடிப்பை நடத்த முடியாது. அதனால் நிறுத்தி விடுவார்கள் என்று அனுஷ்கா கூறியிருக்கிறார். இப்படி தொடர்ந்து சினிமாவில் நடிகைகள் நோய்களுக்கு ஆளாவது சினிமா மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இதையும் படிங்க : சிவாஜிக்கு கொடுக்காம யாருக்கு கொடுப்பீங்க?!.. பொங்கியெழுந்த தயாரிப்பாளர்.. எதற்காக தெரியுமா?…