எப்ப்பா சாமி என்னால முடியல.. மூச்சு வாங்கும் அனுஷ்கா.. வாய்ப்பிற்காக இப்படி ஒரு அக்ரிமென்ட்டா?..
தமிழ் சினிமாவில் முன்னனி நடிகையாக வலம் வந்தவர் நடிகை அனுஷ்கா. தமிழ் ,தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழிகளிலும் ஒரு தவிர்க்க முடியாத நடிகையாக மாறினார். திரையுலகில் இருக்கும்
அனைத்து முன்னனி நடிகர்களுடனும் ஜோடியாக நடித்திருக்கிறார்.
நடிகைகளிலேயே சரித்திர படங்களில் நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நடிகை யாரென்றால் அது அனுஷ்கா தான். பாகுபலி, பாக்மதி போன்ற படங்களில் ஒரு வீர மங்கையாக நடித்து புகழ் பெற்றார். இடையிடையே பிரபல நடிகர் ஒருவருடன் கிசுகிசுக்கப்பட்டார் அனுஷ்கா.
தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த அனுஷ்கா 2015 ஆம் ஆண்டு ஆர்யா நடிப்பில் வெளியான ‘இஞ்சி இடுப்பழகி’ என்ற படத்தில் யாரும் எதிர்பாராத அளவிற்கு எடை அதிகரித்த பெண்ணாக நடித்திருப்பார். ஆனால் அந்தப் படம் எதிர்பார்த்த அளவிற்கு போகவில்லை என்றாலும் அதிலிருந்தே அனுஷ்காவின் மார்கெட்டும் குறைய தொடங்கியது.
அந்தப் படத்திற்கு பிறகு தனது உடல் எடையை குறைப்பதில் மிகவும் சிரமப்பட்டு வந்தார். அதாவது பார்ப்பதற்கு ஓரளவு சரியான விகிதத்தில் இருந்தாலும் உள்ளுக்குள் ஏதோ ஒரு இம்பேலன்ஸ் ஆகிவிட்டதாம். அதனை தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்தாலும் படம் எதிர்பார்த்த அளவுக்கு போகவில்லை.
மேலும் அவரைத் தேடி பல இயக்குனர்கள் வாய்ப்புகள் கொடுக்க முன்வந்திருக்கின்றனர். ஆனால் ஏ.எல்.விஜய்க்கு மட்டும் பச்சைக் கொடி காட்டியிருக்கிறார் அனுஷ்கா. அதுவும் அக்ரிமென்டில் சரியான வாக்கு மூலத்தோடு கையெழுத்து வாங்கிவிட்டு தான் நடிக்கவே ஒப்புக் கொண்டிருக்கிறாராம். படத்திற்காக முன்பு மாதிரியான உடல் எடையை அவரால் கொண்டு வர முடியவில்லையாம்.
அதனால் படத்திற்கு ஏற்ப சிஜி வேலைகள் செய்து அவரது எடையை குறைத்துக் காட்டுவதாக இருந்தால் நடிக்கிறேன் என்று அந்த அக்ரிமெண்டில் இருக்கனுமாம். அதற்கும் ஏ.எல்.விஜய் சம்மதித்தி அக்ரிமெண்ட் பேப்பரும் கையெழுத்தாகிவிட்டதாம்.
இதையும் படிங்க : வாரிசு பட நடிகரை வம்பிழுத்த தயாரிப்பாளர்… உள்ளே புகுந்து மிரட்டிய கேப்டன்… என்ன நடந்தது தெரியுமா?