சூர்யா செய்யாததை ஆர்.பாலாஜி செஞ்சு காட்டிட்டார்.! மேடையில் ஓபனாக பேசிய பொம்மி.!

Published on: June 17, 2022
---Advertisement---

தமிழில் நீண்ட வருடங்கள் பயணித்தும் ரசிகர் மனதில் சிலர் இடம் பிடிப்பதில்லை. ஆனால், ஒரு சில படங்களே நடித்து இருந்தாலும், ரசிகர்கள் மனதில் சிலர் நீங்கா இடம் பிடித்து விடுகின்றனர். அப்படி ஒருவர் தான் அபர்ணா பாலமுரளி .

இவர் தமிழில் 8 தோட்டாக்கள், சர்வம் தாளமயம் ஆகிய படஙக்ளில் நடித்து இருந்தவர் மலையாள நடிகை அபர்ணா பாலமுரளி . அதன் பிறகு சூர்யா உடன் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான சூரரை போற்று திரைப்படத்தில் பொம்மி எனும் கதாபாத்திரத்தில் நடித்து தற்போது வரை ரசிகர் மனதில் நின்று விட்டார்.

அந்த திரைப்படம் திரையரங்கில் வெளியகும் என நினைத்து இருக்கையில், OTTயில் வெளியானது. அங்கும் மிக பெரிய வெற்றியை கொடுத்தது. ரிலீசான சமயம் கோவிட் கட்டுப்பாடுகள் நிறைந்த காலம் என்பதால் பெரிய வெற்றிவிழா என எதுவும் நடத்தப்படவில்லை.

இது குறித்து அண்மையில் நடிகை அபர்ணா பாலமுரளி  பேசியிருந்தார். அவர் தற்போது ஆர்.ஜே.பாலாஜி ஜோடியாக வீட்ல விஷேசம் எனும் படத்தில் நடித்துள்ளார். இன்று இப்படம் ரிலீஸாகியுள்ளது.

இதையும் படியுங்களேன் –  விஜயகாந்த் மாதிரி ஒரு மனுஷன பார்த்ததே இல்ல… சீக்ரெட் சம்பவத்தை உளறிய அந்த தயாரிப்பாளர்.!

அப்போது ஒரு நிகழ்ச்சியில் பேசிய அபர்ணா, ‘ சூரரை போற்று திரைப்படம் மிக பெரிய வெற்றி அடைந்தது. அப்போது இதே போல விழா எதுவும் நடத்தப்பட வில்லை. ஆனால், வீட்ல விஷேசம் படத்தின் ரிலீஸே ஒரு பெரிய விஷேசம் போல மாறிவிட்டது. ‘ என கூறினார். இதுவரை இல்லாத அளவுக்கு புதுசு புதுசாக ஆர்.ஜே.பாலாஜி இந்த படத்திற்காக விளம்பரம் செய்து வருகிறார்.

Manikandan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.