ஆர்யாவால் ஏற்பட்ட வலி!.. அப்ப முடியாததை இப்ப வச்சு செய்யும் நடிகை!..

arya
தமிழ் சினிமாவில் ஒரு ஜாலியான நடிகர் யாரென்றால் அது நடிகர் ஆர்யாதான். கலகலப்புக்கு பேர் போனவர் ஆர்யா. அனைத்து நடிகர்களுடனும் எந்த ஒரு ஈகோ பார்க்காமல் சமரசமாக பழகக்கூடியவர். தமிழ் சினிமாவில் நீண்ட நாள்களாக திருமணம் ஆகாத நடிகர்களின் பட்டியலில் ஆர்யாவும் இருந்தார்.

arya
அதன் பின் நடிகை ஆயிஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு இப்பொழுது இருவருக்கும் ஒரு குழந்தையும் இருக்கிறது. விஷ்ணு வர்தன் இயக்கத்தில் அறிந்தும் அறியாமலும் என்ற படத்தில் முதன் முதலாக அறிமுகமானார் ஆர்யா. அதன் பின் பட்டியல்,சேட்டை, போன்ற பல படங்களில் நடிக்கத் தொடங்கினார்.
இதையும் படிங்க : வெறும் உள்ளாடையுடன் படப்பிடிப்பிற்கு வந்த நம்பியார்!.. காரணமாக இருந்த இயக்குனர்!..
இவருக்கு ஒரு நல்ல வசூலை வாரி கொடுத்த படம் மதராசப்பட்டினம் திரைப்படம். ஒரு நல்ல நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றுத் தந்த படம் சர்பட்டா பரம்பரை திரைப்படம். அடுத்ததாக முத்தையா இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார் ஆர்யா. இந்த நிலையில் நடிகர் ஆர்யாவுடன் சேர்ந்து நடிக்க விருப்பமில்லை என்று வெளிப்படையாக கூறியிருக்கிறார் ஒரு நடிகை.

arya
அவர் வேறு யாருமில்லை. நடிகர் ஆர்யாவால் காதல் தோல்வியில் சிக்கி மிகுந்த மனவேதனையடைந்து மீண்டு வந்த நடிகையான அபர்னதி என்ற நடிகை. ஒரு தனியார் தொலைக்காட்சியில் ஆர்யாவிற்காக பொண்ணு பார்க்கும் அடிப்படையில் ஒரு ஷோ நடத்தினார்கள்.அந்த நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர்தான் நடிகை அபர்னதி.

aparnathy
ஷோ முடிந்ததும் ஆர்யா பணத்தை பெற்றுக் கொண்டு கிளம்பிவிட்டார். ஆனால் அபர்னதியோ ஆர்யாவை நினைத்து மிகுந்த மனவேதனையடைந்து வந்தார். மேலும் ஆர்யா ஆயிஷா திருமணமும் அபர்னதியை பாதிக்கவில்லை. ஏனெனில் அந்த நேரத்தில் ஆயிஷாவை விட்டுவிட்டு வரச்சொல்லுங்கள், ஆர்யாவிற்காக நான் காத்துக் கொண்டிருக்கிறேன் என்றெல்லாம் கூறியிருந்தார்.

arya
அதன் பின் அந்த சம்பவம் அப்படியே கிடப்பில் போட அந்த அபர்னதி இப்பொழுது படங்களில் பிஸியாக நடிக்க தொடங்கிவிட்டார். சமீபத்தில் அவர் நடித்த உடன்பால் திரைப்படத்தின் பிரீமியர் ஷோவில் பங்கேற்று பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டிக் கொடுத்தார். அப்போது ஆர்யாவை பற்றி கேட்கையில் ஆர்யாவுடன் நடிக்க வாய்ப்பில்லை, அவருடன் நடிக்க ஆர்வமும் இல்லை என்று வெளிப்படையாக கூறிவிட்டார் அபர்னதி.