மிட் நைட்ல வருவாரு! அட்ஜெஸ்மெண்ட் இருந்தா இந்தப் படம் – நடிகையை ரவுண்ட் கட்டிய படக்குழு

Published on: December 23, 2023
varsha
---Advertisement---

Actress Varsha: அட்ஜெஸ்மெண்ட் என்பது இப்போது எல்லா துறைகளிலும் சர்வசாதாரணமாகி விட்டது. பெண்கள் மட்டும் இல்லாமல் ஆண்களும் அட்ஜெஸ்மெண்ட் வளையத்திற்குள் மாட்டி விடுகின்றனர். இதற்கு உதாரணமாக தற்போது  நடக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ப்ராவோ சொன்ன ஒரு சம்பவமும் எடுத்துக் கொள்ளலாம்.

அது ஏன் அட்ஜெஸ்ட்மெண்ட்டுக்கு ஒத்துழைத்தால்தான் நீ கேட்டது என சொல்கிறார்கள் என தெரியவில்லை. இதனால் வாழ்வாதாரத்திற்காக ஒரு சில பேர் அதில் விழுந்து விடுகின்றனர். ஒரு சில பேர் அப்படி அட்ஜெஸ்மெண்ட் செய்துதான் வாழ வேண்டும் என்றால் அப்படிப்பட்ட வாழ்க்கையே தேவையில்லை என்று ஒதுங்கி விடுகிறார்கள்.

இதையும் படிங்க: 10 ஆயிரம் ஸ்கொயர் ஃபீட்.. 40 கோடியில் பங்களா!.. சொல்லி அடித்த அட்லீ!..

இதில் சினிமா ஒன்றும் விதிவிலக்கு இல்லை. பெரும்பாலான பிரபலங்கள் குறிப்பாக நடிகைகள் அட்ஜெஸ்மெண்டு குறித்து நிறைய பேசியிருக்கிறார்கள். காமெடி நடிகைகளில் இருந்து டாப் ஹீரோயின் வரை அட்ஜெஸ்மெண்ட் என்ற வார்த்தையை கடந்து வந்தவர்கள்தான்.

இந்த நிலையில் நடிகை வர்ஷா என்பவரும் சமீபத்தில் அட்ஜெஸ்மெண்ட் குறித்து ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். பாடலாசிரியரான பிரியன் தற்போது அரணம் என்ற படத்தை இயக்கி அவரே அதில் ஹீரோவாகவும் நடித்திருக்கிறார்.

இதையும் படிங்க: முதலுக்கே மோசம்!.. ஓவர் பில்டப் காட்டிய சலார்!.. தமிழ்நாட்டில் ஒரு நாள் வசூல் இவ்வளவுதானா?..

அந்தப் படத்தில் பிரியனுக்கு ஜோடியாக நடித்தவர்தான் வர்ஷா. இந்தப் படத்திற்கு முன் பல படங்களில் நடிக்க அவருக்கு வாய்ப்புகள் வந்ததாம். கூடவே அட்ஜெஸ்மெண்ட் ஆஃபரும் சேர்ந்துவந்திருக்கிறது. இதற்கு ஓகே என்றால் படத்தில் நடிக்கலாம் என்று சொல்வார்களாம்.

ஆனால் அதை எல்லாம் மறுத்திருக்கிறார். ஆனால் அரணம் படத்தை பொறுத்தவரைக்கும் பிரியன் மிகவும் பாதுகாப்பாக பார்த்துக் கொண்டாராம். மிட் நைட் சூட் என்றால் வர்ஷா பாதுகாப்பாக இருக்கிறாரா என்று வந்து பார்த்துவிட்டு போவாராம். இவரிடம் நான் மிகுந்த பாதுகாப்பை உணர்ந்தேன் என வர்ஷா கூறினார்.

இதையும் படிங்க: நயன் சம்பளத்தில் 10 சதவீதம் கூட வசூலிக்காத அன்னப்பூரணி!.. இதுல லேடி சூப்பர்ஸ்டார் பட்டம் வேணுமாம்!..