Connect with us
ajith

Cinema News

குத்துவிளக்க பெட்ரூம்ல வச்சா நல்லாவா இருக்கும்? தலை தெறிக்க ஓடிய அசின்! மிஸ் ஆன அஜித் பட வாய்ப்பு

90களின்இறுதியில் கிட்டத்தட்ட 2000 ஆண்டின் ஆரம்பத்தில் அறிமுக நடிகையாக வந்தார் நடிகை அசின். கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட அசின் முதன்முதலாக மலையாள படம் ஒன்றில் தன்னுடைய அறிமுகத்தை பதிவு செய்தார். அதன் பிறகு தமிழில் ஜெயம் ரவியுடன் எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.

ajith1

ajith1

அந்தப் படத்தில் ஒரு மலையாள பெண் கதாபாத்திரத்திலயே நடித்திருப்பார். துடுக்கான நடிப்பும் கொஞ்சிக் கொஞ்சி பேசும் அவருடைய தமிழும் அந்தப் படத்தில் அவரை ஒரு பெரிய அளவில் கொண்டு போய் சேர்த்தது. முதல் படத்தை வெற்றியோடு ஆரம்பித்த அசின் சூர்யாவுடன் கஜினி படத்தில் இணைந்தார்.

அந்தப் படம் அவருடைய நடிப்பையும் தாண்டி தமிழ் சினிமாவையே அசினை திரும்பி பார்க்க வைத்தது. கஜினி படத்தை இப்போது டிவியில் போட்டாலும் அசினுக்காக பார்க்கக்கூடிய ரசிகர்கள் ஏராளம். கிட்டத்தட்ட 25க்கும் குறைவான படங்களில் நடித்திருந்தாலும் அவர் நடித்த அனைத்து படங்களும் ஏதாவது ஒரு விதத்தில் மக்களிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.

ajith2

ajith2

அதுவும் தமிழில் பெரிய ஹீரோக்களாக இருக்கும் விஜய் ,அஜித், சூர்யா, கமல் உட்பட அனைத்து நடிகர்களுடனும் தன்னுடைய சினிமா வாழ்க்கையை பகிர்ந்திருக்கிறார். குறிப்பாக விஜய் திரிஷா இவர்கள் காம்போவை பற்றிய பேசும் மக்களுக்கு அசின் வந்த பிறகு விஜய் அசின் காம்போ மிகவும் பிடித்துப் போய்விட்டது.

மேலும் கவர்ச்சியை அதிகம் விரும்பாதவர் அசின்.இவர் நடித்த படங்களை பார்த்தாலே கவர்ச்சிக்கு எந்த அளவு அவர் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்பது தெரியும். மேலும் கதைகளை கேட்பதில் தன்னுடைய அப்பாவிடமே ஒப்படைத்து இருந்தார் அசின். இந்த நிலையில் அஜித்தின் பில்லா பட வாய்ப்பு முதலில் அசினுக்கு தான் வந்ததாம்.

அந்த நேரத்தில் அவருடைய பில்லா படம் சம்பந்தமான புகைப்படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இயக்குனர் விஷ்ணுவர்தன் முதலில் அசினை அணுக கதையை கேட்டு அசினும் சம்மதம் தெரிவித்திருக்கிறார். அதன் பிறகு போட்டோ சூட்டுகள் எல்லாம் எடுக்கப்பட்டதாம்.

ajith3

ajith3

அதில் பிகினி உடையில் ஒரு புகைப்பட ஸ்டில்லை விஷ்ணுவரதன் கேட்க அதற்கு முடியவே முடியாது என மறுத்துவிட்டாராம் அசின். அதன் பிறகு தான் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வந்தார் நயன்தாரா. அந்த ஒரு ஸ்டில் இப்பொழுதும் இணையத்தில் வைரலாகி கொண்டு வருகின்றது. மேலும் நயன்தாராவிற்கும் இதுதான் கவர்ச்சி உடையில் நடித்த முதல் படம் என்று சொல்லப்படுகிறது.

இதையும் படிங்க : என் ஆசையில் மண்ணள்ளிப் போட்டான்! மகனை பற்றி முதன் முறையாக வாய்திறந்த விஜய்

google news
Continue Reading

More in Cinema News

To Top