அழகை காட்டியே கொல்லுறியே!...ரசிகர்களை சொக்க வைக்கும் அதுல்யா ரவி...

கோலிவுட்டில் ‘காதல் கண்கட்டுதே’ படம் மூலம் அறிமுகமானவர் அதுல்யா ரவி. குடும்ப பெண் போல் முகஜாடை கொண்ட அதுல்யா சமீபகாலமாக கவர்ச்சியில் இறங்கிவிட்டார். ஜெய்யுடன் இவர் நடித்த கேப்மாரி படத்தை அனைவரும் சேர்ந்து கழுவி ஊறினார்கள்.
அதையெல்லாம் காதில் போட்டுக்கொள்ளாமல் தனக்கு பிடித்த கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். சமுத்திரக்கனி இயக்கிய ‘நாடோடிகள் 2’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். மேலும், சாந்தனுக்கு ஜோடியாக அவர் நடித்த ‘முருங்கக்கா சிப்ஸ்’ திரைப்படத்திலும் கிளுகிளுப்பான வசனங்கள் மற்றும் காட்சிகள் இடம் பெற்றிருந்தது.
ஒருபக்கம் டிவிட்டர், இன்ஸ்டாகிராம் என சமூகவலைத்தளத்தில் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும் அவர் அழகிய உடைகளில் போட்டோஷுட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், சுடிதாரில் செம க்யூட்டாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.