எங்களுக்கு கெரியர் தான் முக்கியம்… தனுஷை கழட்டிவிடும் நடிகைகள்…!

Published on: March 9, 2022
dhanush
---Advertisement---

கோலிவுட்டில் ஒரு டாப் நடிகர் அந்தஸ்தில் இருப்பவர் தான் நடிகர் தனுஷ். திரையுலகை பொருத்தவரை தனுஷ் ஒரு சாதனை மன்னன் என்று தான் கூற வேண்டும். இதுவரை யாரும் புரியாத சாதனைகளை கூட தனுஷ் தன் திறமையால் சாதித்துள்ளார். ஆனால் இவரின் சொந்த வாழ்க்கை அவ்வளவு மகிழ்ச்சியாக இல்லை.

கிட்டத்தட்ட 18 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த தன் ஆசை மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்தை விவாகரத்து செய்வதாக தனுஷ் சமீபத்தில் அறிவித்திருந்தார். இதற்கு பலரும் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தனர். ஆனால் தனுஷ் அவரது முடிவில் பிடிவாதமாக இருந்து வந்தார்.

dhanush

மேலும் தனுஷின் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கூட இவர்கள் இருவரையும் சேர்த்து வைக்க எவ்வளவோ முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால் அனைத்தும் தோல்வியில் முடிந்தது. தற்போது தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ஆகிய இருவரும் தனித்தனியாக அவர்களின் வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள்.

இந்நிலையில் தனுஷ் தனது மகளின் வாழ்க்கையை கெடுத்துவிட்டதாக நினைக்கும் லதா ரஜினிகாந்த் அவருக்கு குடைச்சல் கொடுப்பதாக கூறப்படுகிறது. அதன்படி லதா ரஜினிகாந்த் அனைத்து இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களிடமும் தனுஷை வைத்து படம் பண்ணாதீர்கள் என கூறி வருவதாக சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

dhanush

அதுமட்டுமல்ல தனுஷுடன் சேர்ந்து இருந்தால் பட வாய்ப்புகள் நன்றாக இருக்கும் என்ற நினைப்பில் அவருடன் நட்பு பாராட்டிய நடிகைகளுக்கும் தற்போது ஆப்பு வைக்க லதா ரஜினிகாந்த் முடிவு செய்துள்ளாராம். எனவே இனியும் தனுஷுடன் இருந்தால் பட வாய்ப்புகள் கிடைக்காமல் போய்விடும் என்பதால் அந்த நடிகைகள் தனுஷை விட்டு விலகி விட்டார்களாம். இதனால் தனுஷ் என்ன செய்வதென தெரியாமல் தவித்து வருவதாக கூறப்படுகிறது.

ராம் சுதன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment