Connect with us

Cinema History

அப்படி ஒண்ணும் மானங்கெட்டு நடிக்கணும்னு அவசியமில்லை… டான்ஸ் மாஸ்டர் செயலால் கடுப்பான நடிகை!..

தமிழ் சினிமாவில் மக்கள் மத்தியில் பிரபலமாக பேசப்படும் நடிகர்கள் நடிகைகள் குறைவானவர்களே. அதைத் தாண்டி தமிழில் பல வருடங்களாக படங்களில் நடித்தும் பெரிதாக பேசப்படாமல் பிரபலமாக இல்லாமல் போன பிரபலங்கள் பலர் உள்ளனர்.

முக்கியமாக இப்போது உள்ள அளவிற்கு சமூக வலைதளங்களின் வளர்ச்சி இல்லாத காலகட்டங்களில் பத்திரிகைகளின் மூலமாக மட்டுமே பிரபலங்களை அறிந்து கொண்டிருந்தனர் மக்கள். அந்த சமயத்தில் மக்கள் மத்தியில் பிரபலமாக இல்லாமல் போன நடிகைகளில் முக்கியமானவர் நடிகை பாலாம்பிகா.

 

இவர் முதன்முதலாக பாலம் என்கிற திரைப்படத்தில் முரளிக்கு தங்கையாக நடித்து சினிமாவில் அறிமுகமானார். அதற்குப் பிறகு சத்யராஜ் நடித்த நடிகன் திரைப்படத்தில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்த திரைப்படத்தில் குஷ்புவிற்கு தங்கையாக பாலாம்பிகா நடித்திருப்பார்.

நடிகைக்குரிய அழகுடன் அவர் இருந்தாலும் அந்த திரைப்படத்தில் குஷ்பு கதாநாயகியாக இருந்ததால் பாலாம்பிகாவிற்கு எந்த முக்கிய காட்சிகளும் படத்தில் அமையவில்லை.அதற்குப் பிறகு அவர் முதன்முதலாக கதாநாயகியாக நடித்த திரைப்படம் தம்பிக்கு ஒரு பாட்டு என்கிற படம்.

படத்தை விட்டு கிளம்பிய நடிகை:

கதாநாயகியாக நடித்த முதல் படத்திலேயே பல பிரச்சனைகளை சந்தித்து படத்தை விட்டு வெளியேறும் நிலையில் இருந்துள்ளார் பாலாம்பிகா. படப்பிடிப்பு நடந்தப்போது அந்த படத்தில் ஜான்பாபு என்கிற டான்ஸ் மாஸ்டர் அவருக்கு நடனமாட கற்றுக் கொடுத்தார்.

ஆனால் பாலாம்பிகாவிற்கு அந்த படத்தில் நடிக்கும் போது நடனம் ஆடவே தெரியாது. இதனால் கடுப்பான டான்ஸ் மாஸ்டர் படப்பிடிப்பு தளத்திலேயே வைத்து அவரை திட்டி உள்ளார். படப்பிடிப்பு தளத்தில் மக்கள் மற்றும் பட குழுவினர் மத்தியில் இதனால் அவமானமாக ஆகிவிட்டதால் பாலாம்பிகா படப்பிடிப்பை விட்டு கிளம்பி உள்ளார்.

முக்கால்வாசி படப்பிடிப்பு முடிந்த நிலையில் பாலாம்பிகா இப்படி கிளம்புவது பலருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது. அதன் பிறகு படக்குழுவினர் அனைவரும் சமாதானப்படுத்தி அவரை இந்த படத்தில் நடிக்க வைத்துள்ளனர். இந்த நிகழ்வை பாலாம்பிகா ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார்.

இதையும் படிங்க: வீட்டுக்கே போகாமல் அமலாபாலுடன் ஜாலி!.. கையும் களவுமாக பிடித்து எச்சரித்த ரஜினி!

google news
Continue Reading

More in Cinema History

To Top