மலையாளத்தில் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பின்னர் மலையாளப்படத்தின்மூலம் நடிகையாக அறியப்பட்டவர் நடிகை பானு. பின்னர் தெலுங்கில் ‘போட்டோ’ என்ற படத்தில் நாயகியாக நடித்த இவர் தமிழில் 2007ம் ஆண்டு ஹரி இயக்கத்தில் விஷால் ஹீரோவாக நடித்து வெளியான ‘தாமிரபரணி’ என்ற படத்தின்மூலம் நாயகியானார்.
பொதுவாக மலையாள நடிகைகளுக்கு தமிழ் ரசிகர்கள் மனதில் சிறப்பான ஒரு இடம் உண்டு. அதே நினைப்பில் எப்படியாவது முன்னணி நடிகையாகிவிடலாம் என நினைத்த இவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. முதல் படம் வெற்றி பெற்றும் பெரிய நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைக்காததால் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி, சிறுசிறு ரோலாக இருந்தாலும் நடித்து வந்தார்.
அதன்படி ரசிகர் மன்றம், அழகர் மலை, சில படங்களில் மட்டுமே நாயகியாக நடித்தார். பின்னர் வாய்ப்பு இல்லாமல் தேசிங்கு ராஜா படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடினார். ஒருகட்டத்தில் படவாய்ப்புகள் இல்லாமல் போகவே 2015ல் ரிங்கு டோமி என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திருப் பின்னும் படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார்.
இவருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. அடிக்கடி தனது குடும்ப புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிரும் இவர், தற்போது தன்னுடைய மகளுடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்ட்டாவில் பகிர்ந்துள்ளார். அந்தப்படத்தில் இருவரும் சிகப்பு நிற உச்சியில் செம க்யூட்டாக இருக்கிறார்கள்.
தமிழ் சினிமா…
சுதா கொங்கரா…
சிவகார்த்திகேயன் நடிப்பில்…
பொதுவாக சினிமா…
சின்ன பட்ஜெட்டில்…