பானுமதியை கட்டிபிடித்து நடிக்க தயங்கிய நடிகர்!..கூச்சத்தை போக்க என்ன செய்தார் தெரியுமா நம்ம நாயகி!..
அந்த கால சினிமாவில் ஒரு நடிகையை பார்த்து ஒட்டு மொத்த சினிமாவுமே பார்த்து பயந்த நடிகை யாரென்றால் அது நடிகை பானுமதி தான். தான் நடிக்கும் படங்களில் அமையும் பாடல் காட்சிகளில் தானே பாடி நடிக்க கூடிய நடிகையும் ஆவார்.
இவரின் எல்லா படங்களிலும் அமைந்த பாடல்கள் எல்லாம் இவர் தான் பாடுவார். பேச்சிலும் நடிப்பிலும் ஒரு தைரியமான தொனியை பார்க்க முடியும். அந்த அளவுக்கு தைரியசாலியான நடிகை தான் பானுமதி. ஒரு சமயம் எம்.ஜி.ஆருடன் ‘அலிபாவும் 40 திருடர்களும்’ படத்தில் நடித்துக் கொண்டிருந்த சமயத்தில் நடந்த ஒர் நிகழ்வை சித்ரா லட்சுமணன் ஒரு பேட்டியின் போது நம்மிடையே பகிர்ந்தார். அவர் கூறும் போது அந்த படத்தின் உச்சக்கட்ட காட்சியின் முன்பு ஒரு பாட ல் காட்சி வருமாம். அந்த பாடல் காட்சியில் நடிக்க எம்.ஜி.ஆரால் கால்ஷீட் கொடுக்க முடியவில்லையாம்.
இதையும் படிங்க : ஒரு காமெடி நடிகனா கவுண்டமணி இப்படி செஞ்சிருக்கனும்… ஆனால்?? தனது வருத்தத்தை பகிரும் பிரபல காமெடி நடிகை…
ஆனால் எப்படியாவது எடுக்கவேண்டும் என்று அந்த படத்தின் இயக்குனரான டி.ஆர்.சுந்தரம் எம்.ஜி.ஆருக்கு பதிலாக அவரை போன்றே இருக்கும் கரடி முத்து என்ற நடிகரை டூப்பாக பயன்படுத்தி அந்த பாடல் காட்சியை எடுக்க திட்டமிட்டிருக்கிறார். அதில் பானுமதியை கட்டிபிடித்து நடிக்க வேண்டும் என்று சொன்னதும் பயந்தாராம் கரடி முத்து.
ஏனெனில் பானுமதியின் கையை பிடித்து நடிக்கவே பெரிய பெரிய நடிகர்கள் தயங்குவார்களாம். அப்படி இருக்கும் போது கட்டிபிடிக்க சொன்னால் எப்படி என்று மிகவும் பயந்தாராம். பானுமதி சொல்லியும் கேட்கவே இல்லையாம் கரடி முத்து. அதன் பின் பானுமதியே தானாகவே வந்து கரடி முத்து கையை பிடித்து அவரை கட்டிபிடிக்க வைத்தாராம்.