சண்டை போடுறதுல சீனை மறந்துட்டாரு போல தலைவர்?.. கடுப்பில் நடிகை செய்த காரியம்
வாள்சண்டைனாலே தமிழக மக்கள் மனதில் முதல் ஆளாக நினைவுக்கு வருவது மக்கள் திலகம் எம்ஜிஆர். இவர் கையை சுழட்டி சுழட்டி சண்டை போடும் விதம் பார்க்கிற அனைவரையும் விசில் அடிக்க தூண்டும். மேலும் இதற்காகவே பெரும்பாலான படங்களில் கண்டிப்பாக வாள் சண்டை காட்சிகள் இடம்பெறும்.
இவருக்கு வாள்சண்டையில் சரியாக போட்டிக்கு போட்டியாக நிற்கக் கூடிய ஒரே நடிகர் நம்பியார். இருவரும் வாள்சண்டையில் கில்லாடிகள் தான். அந்த வகையில் ஒரு படத்திற்காக எம்ஜிஆரும் நம்பியாரும் வாள்சண்டை போடுவது மாதிரியான காட்சிகள் எடுத்துக் கொண்டிருந்தார்களாம்.
காட்சி என்னவென்றால் நம்பியாருடன் வாள் சண்டையிட்டு நடிகை பானுமதியை எம்ஜிஆர் மீட்டு வருவது மாதிரியான காட்சியாம். இந்த காட்சியில் சண்டை முடியும் வரை பானுமதி கோபத்துடனும் பதற்றத்துடனும் இருக்க வேண்டுமாம். காட்சிகள் படமாக்கிக் கொண்டிருக்க பானுமதியும் நீண்ட நேரமாக முகத்தை கோபமாக வைத்திருந்தாராம்.
ஆனால் எம்ஜிஆர் முடித்தப்பாடில்லையாம். சண்டை போட்டுக் கொண்டே இருந்தாராம். ஒரு நேரத்தில் கடுப்பாகி போன பானுமதி எம்ஜிஆரிடம் அந்த வாளை என்னிடம் கொடுங்கள், நானே சண்டையிட்டு என்னை காப்பாற்றிக் கொள்கிறேன் என்று கூறினாராம்.
அந்த அளவுக்கு எம்ஜிஆரிடம் பேச பானுமதிக்கு உரிமை அளித்திருந்தார் என்று தான் சொல்லவேண்டும்.மேலும் யாரும் எம்ஜிஆரை பேர் சொல்லி அழைக்க தயங்குவார்கள். ஆனால் நடிகைகளில் பானுமதி மட்டுமே மிஸ்டர். ராமச்சந்திரன் என்று பேர் சொல்லித்தான் அழைப்பாராம்.
தனக்கென்று ஒரு சிம்மாசனம் போட்டு அமர்ந்தவர் தான் பானுமதி. அறிஞர் அண்ணாவால் நடிப்பிற்கு இலக்கணம் வகுத்த நடிகை என்ற பெயரையும் பெற்றவர். மனதில் பட்டதை அப்படியே பேசுபவர். அதன் காரணமாகவே எம்ஜிஆர் அவருக்கு அனைத்து உரிமைகளையும் கொடுத்திருந்தார் என்று தான் சொல்ல வேண்டும். இந்த அழகான பதிவை சித்ரா லட்சுமணன் ஒரு பேட்டியின் போது தெரிவித்தார்.