இனிமே நான் நடிக்க மாட்டேன்!.. சிவாஜி படத்தின் படப்பிடிப்பிலிருந்து வெளியேறிய பானுமதி...

Sivaji: 50,60களில் மிகவும் திறமையான நடிகையாக பார்க்கப்பட்டவர் பானுமதி. நடிகை, இயக்குனர், தயாரிப்பாளர், கதாசிரியர், வசனகர்த்தா, பாடகி என அப்போதே கலக்கியவர் இவர். இவரை பார்த்து சிவாஜி, எம்.ஜி.ஆரே மிரள்வார்கள். இவரிடம் எல்லோரும் மிகுந்த மரியாதையுடன்தான் பேசுவார்கள்.

நடிகர் திலகம் சிவாஜியே ’பானுமதி அம்மாவுக்கு முன் நான் ஒரு சின்ன பையன்’ என ஒருமுற சொன்னார் என்றால் பானுமதி எவ்வளவு ஆளுமையுடன் இருந்திருப்பார் என யோசித்து பார்க்க வேண்டும். பானுமதி மிகுந்த சுயமரியாதை உடையவர். அவரின் கதாபாத்திரத்திற்கு சரியான, பொருத்தமான வசனங்கள் இருக்க வேண்டும்.

இதையும் படிங்க: சிவாஜி சினிமா உலகில் காலடி எடுத்து வைக்க காரணமாக இருந்தவர் இந்த நடிகரா? என்ன ஒரு ஆச்சரியம்..!

அவருக்கு நல்ல காட்சிகளும் இருக்க வேண்டும். இல்லையேல், அப்படத்திலிருந்து விலகிவிடுவார். அதேபோல், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பலருடன் சண்டை போட்டு பல படங்களிலிருந்தும் வெளியேறி இருக்கிறார். எம்.ஜி.ஆர் நாடோடி மன்னன் படத்திலிருந்து கூட அப்படித்தான் வெளியேறினார்.

பானுமதி அப்படி இருந்தும் படத்தின் வெற்றிக்கு பானுமதி தேவைப்பட்டதால் அவருக்கு பலரும் பணிந்து போனார்கள். இதற்கு ஏவி மெய்யப்ப செட்டியாரும் விதிவிலக்கல்ல. ஏவிஎம் இயக்கத்தில் பானுமதி நடித்த திரைப்படம்தான் அன்னை. இந்த படத்தை கிருஷ்ணன் பஞ்சு இயக்கினார்கள்.

இதையும் படிங்க: முதல் சிங்கிள் ஷாட் ஹீரோவாக சிவாஜி மாறியது இப்படித்தான்!.. நடிகர் திலகம்னா சும்மாவா!

இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், திடீரென ஒரு நாள் ‘இனிமேல் இந்த படத்தில் நான் நடிக்க மாட்டேன் என செட்டியாரிடம் சொல்லிவிடுங்க’ என சொல்லிவிட்டு போய்விட்டார். இயக்குனர் கிருஷ்ணன் - பஞ்சு அதிர்ச்சி அடைந்து இதை செட்டியாரிடம் சொல்ல அவரோ ‘அவரின் வீட்டுக்கு போய் அவருக்கு என்ன பிரச்சனை என கேளுங்கள்’ என சொல்லிவிட்டார்.

அவர் சொல்லியபடியே இயக்குனர்கள் கிருஷ்ணன் - பஞ்சு மற்றும் அப்படதின் கதாசிரியரும் பானுமதியின் வீட்டுக்கு சென்றனர். ஒரு காட்சியில் ‘அம்மாவுக்கு முக்கியத்துவம் கொடுப்பதுபோல வசனம் வருகிறது. நான் சும்மா நின்று கொண்டிருக்கிறேன். எனக்கும் நல்ல வசனத்தை எழுதி கொடுங்கள். அப்போதுதான் படத்தில் நடிப்பேன்’ என சொல்ல அவர் கூறியது போலவே வசனகர்த்தா வசனத்தை எழுதி கொடுத்தார். அதில் சந்தோஷமடைந்த பானுமதி மீண்டும் படப்பிடிப்பில் நடித்தார்.

 

Related Articles

Next Story