Cinema News
இதெல்லாம் ஒரு நடிப்பா? செல்வமணியை செவுல்லயே விட்ட பானுமதி – யாரையும் விடாது போல இந்தம்மா
தமிழ் சினிமாவில் பானுமதி என்ற பெயரை கேட்டாலே சிறிய நடிகர்கள் முதல் பெரிய நடிகர்கள் வரை கொஞ்சம் பயப்படதான் செய்வார்கள். கெத்தான நடிகையாக ,மிகவும் தைரியசாலியாக , எதையும் துணிந்து பேசுபவராக ஒரு ராஜமாதாவாகவே வலம் வந்தார்.
நடிகை என்பதையும் தாண்டி ஒரு இயக்குனராக, பாடகியாக, தயாரிப்பாளராக ஒரு பன்முகக் கலைஞராக விளங்கி வந்தார் பானுமதி. எம்ஜிஆரையே ராமச்சந்திரன் என்று பெயர் சொல்லி அழைக்கும் ஒரு நபர் பானுமதிதான், ஒரு கட்டத்தில் எம்ஜிஆருக்கும் பானுமதிக்கும் இடையே பிரச்சினைகள் எழ நாடோடி மன்னன் படத்தில் இருந்து பாதியிலேயே போனார் பானுமதி.
பானுமதியிடம் அவ்வளவு சீக்கிரம் நெருங்குவது என்பது எளிதான காரியம் இல்லை. அப்படி இருக்க நீண்ட ஒரு இடைவேளிக்கு பிறகு அவர் நடித்த படம் செம்பருத்தி. அந்தப் படத்தை ஆர்.கே.செல்வமணி இயக்க பிரசாந்த், ரோஜா, ராதாரவி, மன்சூர் அலிகான் போன்றோர் நடித்திருந்தார்.
முதலில் பானுமதி நான் நடிப்பை விட்டு வெகு நாள்கள் ஆகிவிட்டது , நடிக்க வரமாட்டேன் என்று சொல்லியிருக்கிறார். ஆனால் செல்வமணி மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொண்டதன் பேரில் நடிக்க வந்தார் பானுமதி.
அதற்கு பின்னனியிலும் ஒரு காரணம் இருக்கிறதாம். அடையாறு ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டில் தான் செல்வமணி படித்துக் கொண்டிருந்தாராம். அங்கு ஒரு முக்கியமான பொறுப்பில் பானுமதி இருந்தாராம். அந்த நேரம் ஒரு ஆக்ஷன் கோர்ஸில் சேர்வதற்காக ஆடிசன் மாதிரி நடந்திருக்கிறது.
இதையும் படிங்க : ரஜினி – லோகேஷ் படத்தில் 15 முன்னணி நடிகர்கள்.. பிரம்மாண்டத்தின் உச்சமாக உருவாகும் தலைவர் 171…
செல்வமணி பானுமதி முன்பு நடித்துக் காட்டினாராம். அழுவது போல் நடிக்க வேண்டும் என சொல்லியிருக்கிறார். ஆனால் செல்வமணிக்கு அழவே வரவில்லையாம். உடனே யாரும் எதிர்பாராத விதமாக செல்வமனியில் கன்னத்தில் பளார் என்று அறை விட்டிருக்கிறார்.
அதன் பிறகே அந்த ஒரு சீனை அழுது நடித்துக் காட்டினாராம். இப்படித்தான் செல்வமணிக்கும் பானுமதிக்கும் பழக்கம் ஏற்பட செம்பருத்தி படத்தில் நடித்தார். ஆனால் இந்தப் படத்திற்கு பிறகு பானுமதி நடிக்கவே இல்லை. இந்த சுவாரஸ்ய தகவலை பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு கூறினார்.