எம்ஜிஆரை கவனிக்காமல் கால் மேல் கால் போட்டு இருந்த நடிகை... அப்புறம் நடந்தது இதுதான்!..
ஹீரோயின்களில் பலர் சினிமா சான்ஸ் கிடைப்பதற்கு முன்பே நடிப்பதற்கு ஆர்வம் காட்டியவர்களாகத் தான் இருப்பார்கள். அவர்கள் தான் நடிப்பிலும் ஜொலிப்பார்கள். ஆர்வமே இல்லாமல் எந்த ஒரு வேலையையும் திறம்பட செய்ய முடியாது என்பதே உண்மை. ஆனால் இவர் கொஞ்சம் விதிவிலக்கு. சினிமாவே பார்த்தது இல்லையாம். நடிப்பது என்றால் என்ன என்பதே தெரியாதாம். ஆனால் எல்லோரும் சொல்வதைக் கேட்டு நடிக்க வந்து விட்டார். களத்தில் குதித்ததும் நடிப்பும் தானாக வந்துவிட்டது.
அவர் வேறு யாருமல்ல. அந்தக்கால நடிகை பாரதி. இவர் உயர்ந்த மனிதன், நாடோடி, அவளுக்கென்று ஒரு மனம், மாயமோதிரம், தங்கச்சுரங்கம் என பல சூப்பர்ஹிட் படங்களில் நடித்துள்ளார். பார்ப்பதற்கு அச்சு அசலாக வைஜெயந்திமாலா மாதிரியே இருப்பார். அவர் பேச்சும், நடையும் நளினமானது. தனது சினிமா அனுபவங்களை இப்படி சொல்கிறார்.
இதையும் படிங்க... சிவாஜி கட்டிய தாலியை ரொம்ப நாளா மறைத்து வைத்திருந்த பத்மினி…. அப்புறம் நடந்தது தான் ஹைலைட்..!
நான் காலேஜில் படிக்கும் போது நிகழ்ச்சிகளில் நடனமாடுவேன். அந்தப் போட்டோக்களை நோட்டீஸ் போர்டில் ஒட்டி இருப்பார்கள். நடிகர் கல்யாண்குமார் அப்போது புதுமுகம் தேடிக்கொண்டு இருந்தார். என்னை நடிக்க அழைத்தார்கள். எனக்குப் பிடிக்கவில்லை.
எங்க குடும்பத்தில் படம் பார்க்க கூட தியேட்டருக்கு அழைத்துப் போக மாட்டார்கள். எனக்கு நடிப்பதற்கு கொஞ்சம் கூட விருப்பமே இல்லை. என் கல்லூரி ஆசிரியர்கள் என்னை நீ நல்லா அழகா இருக்க. நல்லா நடனம் ஆடுறே. வந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாத. நடின்னு சொன்னாங்க. அப்புறம் நடிக்க ஆரம்பிச்சேன்.
2 வருஷம் ரொம்ப கஷ்டப்பட்டு நடிச்சேன். தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி, இந்தின்னு பல மொழிப்படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. அந்த சமயத்துல அந்தந்த மொழிகளைக் கற்றுக்கொண்டேன். இன்று 8 மொழிகள் எனக்குத் தெரியும்.
தமிழ்ல என்னோட முதல் படமே உயர்ந்த மனிதன். சிவாஜியுடன் இணைந்து நடித்தேன். அடுத்து எம்ஜிஆருடன் நாடோடி படத்தில் நடித்தேன்.
தெலுங்கு, கன்னட படங்களிலும் நிறைய ஹிட்டுகளைக் கொடுத்துள்ளேன். முதல்ல நடிக்கும்போது மனதுக்குள் அழுது கொண்டே இருந்தேன். அதன்பிறகு இது கடவுள் கொடுத்த வரம்னு என்னை நானே சமாதானப்படுத்திக் கொண்டேன். இதுதான் தொழில் என்றதும் அதில் கவனம் செலுத்தினேன். பள்ளி, கல்லூரிகளில் விளையாட்டில் தான் ஆர்வம். ஒலிம்பிக் கனவுகள் எல்லாம் இருந்தது. ஆனால் விதி வலியது என்பதை பின்னர் தான் தெரிந்து கொண்டேன்.
இதையும் படிங்க... காதலிக்காக நிஜமாகவே பச்சை மிளகாயைத் தின்று அசத்திய தனுஷ்… அட அவர் அப்பவே அப்படித்தான்!..
நடிக்க வந்ததும் என் பெயரை மாற்ற வேண்டும் என்று எம்ஜிஆர் சொன்னார். அது எனக்குப் பிடிக்கவில்லை. அப்போது நான் மறுத்துவிட்டேன். கால் மேல் கால் போட்டு உட்கார்வது எனது பழக்கம். மற்றவர்கள் சொன்னதால் எம்ஜிஆர் முன் மட்டும் அப்படி இருக்க மாட்டேன். அவர் அந்த இடத்தை விட்டு நகர்ந்தால் உடனே கால் மேல் கால் போட்டு விடுவேன்.
ஒருமுறை நான் இப்படி இருந்தபோது எம்ஜிஆர் கவனித்து விட்டார். உடனே இயக்குனர் பந்துலு அவ சின்னப்பொண்ணு தெரியாம செய்துட்டா என்றாராம்.