Cinema News
பாலியல் அத்துமீறலுக்கு உள்ளான பாவனா… அந்த டாப் நடிகர் சிக்கியது எப்படி தெரியுமா? சினிமா பாணியில் ஒரு உண்மை சம்பவம்…
மலையாளத்தில் மிக முக்கியமான நடிகையாக திகழ்ந்து வருபவர் பாவனா. இவர் தமிழில் “சித்திரம் பேசுதடி”, “வெயில்’, “தீபாவளி”, “அசல்” போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். மலையாளத்தில் மட்டுமல்லாது தமிழிலும் பாவனாவுக்கென்று தனி ரசிகர் கூட்டம் உண்டு.
பாலியல் அத்துமீறல்
இந்த நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி 17 ஆம் தேதி பாவனா கொச்சிக்கு காரில் சென்றுகொண்டிருந்தபோது அவரது காரை வழிமறைத்த 7 பேர் கொண்ட கும்பல், அவரது காருக்குள் புகுந்து அவரை கடத்தி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் பாவனா. இந்த சம்பவம் மலையாளத் திரையுலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து பாவனாவுக்கு ஆறுதலாகவும் அவரை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கிய கும்பலை கண்டுபிடிக்க வேண்டும் எனவும் திரையுலகத்தை சேர்ந்த முக்கிய நடிகர் நடிகைகள் பலரும் பாவனாவின் பக்கம் நின்றனர். இதற்காக ஒரு கூட்டம் கூட நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் மலையாளத்தின் முன்னணி நடிகரான திலீப்பும் கலந்துகொண்டார்.
பாவனா கொடுத்த புகாரின் அடிப்படையில் பாவனா போலீஸாரிடம் கூறிய அடையாளங்களை வைத்து பல்சர் சுனி என்ற நபரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தியது. அந்த விசாரணையில் பல்சர் சுனி, அந்த 7 பேர் கொண்ட கும்பலில் ஒருவராக இருந்தது தெரிய வந்திருக்கிறது. மேலும் அந்த விசாரணையில் நடிகர் திலீப்தான் இதனை செய்யச்சொல்லி ஆள் அனுப்பியிருக்கிறார் எனவும் தெரிய வந்திருக்கிறது.
திலீப் கைது
ஆனால் இது குறித்து திலீப்பை விசாரித்தபோது அவர் இந்த குற்றச்சாட்டை மறுத்துவிட்டார். அதனை தொடர்ந்து திலீப்பின் வங்கி கணக்கில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகை பல்சர் சுனியின் வங்கி கணக்கிற்கு மாற்றப்பட்டிருந்தது போலீஸாருக்கு தெரியவந்தது. இதனை தொடர்ந்து திலீப் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தது. அதன் பின் நான்கு மாதங்கள் கழித்து திலீப் ஜாமினீல் வெளிவந்தார். இன்று வரை இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த வழக்கிற்கான தீர்ப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் திலீப், ஏன் இவ்வாறு செய்தார் என்பதற்கு பின்னணியாக ஒரு காரணம் கூறப்படுகிறது. அதாவது திலீப்பும் நடிகை மஞ்சு வாரியரும் 1998 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். ஆனால் திலீப்பிற்கும் நடிகை காவ்யா மாதவனுக்கும் தொடர்பு இருந்ததாக பாவனாவுக்கு தெரியவந்திருக்கிறது. பாவனாவும் மஞ்சு வாரியரும் மிகச் சிறந்த நண்பர்கள். ஆதலால் மஞ்சு வாரியரிடம் பாவனா, திலீப்பும் காவ்யா மாதவனும் நெருங்கி பழகி வருகிறார்கள் என்பதை கூறியிருக்கிறார். இதனை தொடர்ந்து கடந்த 2015 ஆம் ஆண்டு திலீப்பை மஞ்சு வாரியர் விவாகரத்து செய்தார்.
இதற்கு பழிவாங்கத்தான் திலீப் அவ்வாறு ஒரு செயலில் இறங்கியதாக சில தகவல்கள் கூறுகின்றன, திலீப்பின் முன்னாள் மனைவியான மஞ்சு வாரியர் தமிழில், “அசுரன்”, “துணிவு” ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இனி அந்த பாடலை பாடமாட்டேன்-மகன் இறந்த துக்கத்தில் டி.எம்.எஸ் எடுத்த திடீர் முடிவு…