Entertainment News
எப்பவும் நீதான் ஃபேவரைட்டு!… தாறுமாறாக வைரலாகும் பாவனா….
மிஷ்கின் இயக்கிய ‘சித்திரம் பேசுதடி’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பாவனா. முதல் திரைப்படத்திலேயே சிறப்பான நடிப்பை வழங்கி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
இயக்குனர் சிகரம் பாலச்சந்தரே அவரை பாராட்டி கடிதம் எழுதியிருந்தார். அதன்பின், வெயில், தீபாவளி, கூடல் நகர் என பல திரைப்படங்களில் நடித்தார். அதன்பின், தனது நீண்ட நாள் காதலர் நவீனை திருமணம் செய்து கொண்டார்.
அதன்பின் அவர் தமிழ் திரைப்படங்களில் நடிக்கவில்லை. ஒருபக்கம், தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இந்நிலையில், பச்சை நிற உடையில் சுடிதார் அணிந்து அவர் கொடுத்துள்ள போஸ் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது.