கற்பு முக்கியம்தான்!.. ஆனா?!.. ஃபீலிங்ஸ் காட்டும் பூனைக்கண் புவனேஸ்வரி...
Actress Bhuvaneswari: தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்டங்களில் நடித்தவர் பூனைக்கண் புவனேஸ்வரி. பெரும்பாலும் காமெடி அல்லது கவர்ச்சி வேடங்களில் நடித்திருப்பார். பிரியமானவளே, ரிஷி, என்னவோ பிடிச்சிருக்கு, குண்டக்க மண்டக்க உள்ளிட்ட பல படங்களிலும் நடித்தார். பெரும்பாலும் விலைமாதுவாக பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படத்தில் கூட விலைமாதுவாக வந்து கலக்கி இருப்பார். இவர் தமிழில் கடைசியாக நடித்த திரைப்படம் தலைநகரம். அதன்பின் தெலுங்கு சினிமாக்களில் மட்டுமே நடித்து வருகிறார். அதற்கு காரணம் காவல்துறையினர் இவர் மீது விபச்சார வழக்கு பதிவு செய்தனர்.
இதையும் படிங்க: விஜயகாந்திடம் ஜானகி அம்மாள் காட்டிய அன்பு!.. கேப்டனுக்கு அவர் கொடுத்த பரிசுதான் ஹைலைட்!..
ஆனால், அது திட்டமிட்ட சதி. என் மீது தவறாக வழக்கு தொடர்ந்துள்ளனர் என நீதிமன்றத்தில் வாதாடி அந்த வழக்குகளிலிருந்து வெளியே வந்தார். அதன்பின் பல வருடங்கள் அவரை பற்றியை செய்தியை பார்க்க முடியவில்லை. திடீரென சீரியல் வில்லியாக நடிக்க துவங்கினார்.
சித்தி சீரியலில் நடிக்க துவங்கிய புவனேஸ்வரி சொர்கம், ராஜ ராஜேஸ்வரி, தெக்கத்தி பொண்ணு, சந்திரலேகா, ஒரு கை ஓசை, பாசமலர் ஆகிய சீரியல்களில் வில்லியாக வந்து கலக்கினார். தற்போது பல வருடங்களுக்கு பின் ஊடகத்தில் பேசிய புவனேஸ்வரி ‘கற்பு என்பது புனிதமானது. மாடர்ன் உலகில் பெண்களுக்கு அது புரியவில்லை. என்னை பற்றி தவறான செய்திகளை வெளியிட்டு என் பேரை கெடுத்துவிட்டனர். எனக்கு மன உளைச்சலை கொடுத்தார்கள்.
இதையும் படிங்க: வாடிவாசலுக்கும் வணங்கான் நிலைமைதானா..? சிக்கலில் மாட்டி விழி பிதுங்கும் வெற்றிமாறன்!..
இப்போது நான் தமிழ் படங்களில் நடிப்பது இல்லை. தெலுங்கு படங்களில் மட்டுமே நடிக்கிறேன். சரோஜா தேவியை எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால், அவருக்கு கிடைத்தது போல் எனக்கு வேடம் கிடைக்கவில்லை. பல கஷ்டங்களை தாண்டி நான் நின்றதற்கு காரணம் என் அம்மாதான். நான் சமைத்தால் எல்லோருக்கும் பிடிக்கும். அனாதை குழந்தைகள், வயதானவர்கள் என பலருக்கும் நான் உதவி செய்து வருகிறேன்.
சினிமாவில் திறமை இருந்தால் மட்டுமே நிலைக்க முடியும். யாரையும் நம்பி வரக்கூடாது. என் மீது சுமத்தப்பட்ட புகார்கள் என் மனதை மிகவும் பாதித்தது. நிறைய கஷ்டப்பட்டேன்’ என புவனேஸ்வரி பேசியுள்ளார்.
இதையும் படிங்க: கிண்டலடித்த சினிமா உலகம்!.. அவமானத்தை தாண்டி ‘அப்பு’வாக சாதித்து காட்டிய கமல்..