ஷங்கர் சொன்ன அந்த ஒரு வார்த்தை!.. பாய்ஸ் புவனேஸ்வரி பகிர்ந்த ரகசியம்....
திரையுலகில் கிளுகிளுப்பான வேடங்களில் நடித்து ரசிகர்களை ஏக்க பெருமூச்சு விட வைத்தவர் புவனேஸ்வரி. பல திரைப்படங்களில் இவர் சின்ன சின்ன வேடங்களில் நடித்துள்ளார். இவர் ஆந்திராவை சேர்ந்தவர். 25க்கும் மேற்பட்ட தமிழ் படங்களிலும், தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
மேலும், சித்தி, சொர்க்கம், ராஜ ராஜேஸ்வரி, தெக்கத்தி பொண்ணு, சந்திரலேகா, ஒரு கை ஓசை மற்றும் பாசமலர் ஆகிய சீரியல்களிலும் நடித்துள்ளார். இவர் மீது போலீசார் விபச்சார வழக்கு பதிந்து அவரை சில முறை கைதும் செய்துள்ளனர். அதன் பின்னர்தான் இவர் சீரியலில் நடிக்க துவங்கினார்.
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கி சர்ச்சையில் சிக்கிய பாய்ஸ் திரைப்படத்தில் விபச்சாரியாக ஒரு காட்சியில் நடித்திருப்பார். சித்தார்த், பரத், நகுல், மணிகண்டன், தமன் ஆகியோர் இவரை ஆர்வக்கோளாறில் வரவழைத்து ஆனால் பயத்தால் எப்படி எஸ்கேப் ஆகுகிறார்கள் என காட்சி வரும். இந்த காட்சிதான் சர்ச்சையில் சிக்கி ஷங்கருக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இந்த படத்தில் நடித்தது பற்றி சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய புவனேஸ்வரி ‘பாய்ஸ் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்ததும் மகிழ்ச்சி அடைந்தேன். ஏனெனில், ஷங்கர் போன்ற பெரிய இயக்குனர் படத்தில் வாய்ப்பு. ஆனால், என் கதாபாத்திரம் பற்றி ஷங்கர் சொன்ன போது நடிக்க யோசித்தேன். அதற்கு ‘5 இளைஞர்கள் ஆர்வக்கோளாறில் அதை செய்வார்கள். ஆனால், அவர்களின் விரல் கூட உங்கள் மேல் படாது’ என சொன்னார். அதன்பின்னரே அந்த படத்தில் நடிக்க சம்மதம் சொன்னேன்’ என புவனேஸ்வரி கூறியுள்ளார்.
இதையும் படிங்க: மிகுந்த மன உளைச்சலில் அஜித்.. இது யாரு வீட்டுலயும் நடக்கக் கூடாது!.. மூத்த பத்திரிக்கையாளர் பேட்டி..