பிபாஷா பாசு பெங்காலி பியூட்டி கேர்ள். 7.1.1979ல் பிறந்தார். இவரது தந்தை ஹிராக் ஒரு சிவில் என்ஜினீயர். தாய் மம்தா குடும்பப்பெண். பிடிஷா என்ற அக்காவும், விஜேதா என்ற தங்கையும் உள்ளனர். தனது 8வது வயது வரை டெல்லியில் இருந்தார்.
அங்குள்ள ஏபிஜே உயர்நிலைப்பள்ளியில் படித்தார். பின்னர் அவரது குடும்பம் கொல்கத்தாவிற்கு இடம்பெயர்ந்தது. அங்கு 12ம் வகுப்பை படித்து முடித்தார். படிக்கும்போது அவர் டாக்டராக வேண்டும் என்ற ஆசையுடன் இருந்தார்.

ஆனால் அவரோ வணிகவியல் துறையைத் தேர்வு செய்தார். அவர் பவானிப்பூர் கல்வியியல் சொசைட்டியில் படித்தார். அவர் சேர்ந்த கல்லூரியில் ரேம்ப் ஷோக்கள் நடப்பதுண்டு. அவர் இதில் கலந்து கொண்டதும் பார்ட் டைம் மாடலிங்கானார். அவர் சூப்பர் மாடல் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார்.
இந்த வெற்றியைத் தொடர்ந்து அவர் தேசிய மற்றும் உலகளவிலான மாடலிங் போட்டியில் கலந்து கொண்டார். அஜ்னபீ என்ற இந்திப்படத்தில் களமிறங்கினார். 2001ல் வெளியானது. இந்தப்படத்தில் வில்லியாக நடித்திருந்தார். பின்னர் ராஷ் என்ற படம் வெளியானது. இந்தப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
2003ல் வெளியான ஜிஸ்ம் என்ற படம் தனி அந்தஸ்தைப் பெற்றுத் தந்தது. அபிஷேக் பச்சனுடன் ரெபியூக் என்ற படத்தில் நடித்தார். பிபாஷா பாஸ் நடிக்கும் காட்சிகள் அனைவராலும் பாராட்டைப் பெற்றன. தமிழ்ப்படம் என்றால் தளபதி விஜயுடன் இணைந்து நடித்த சச்சின் தான்.

2006ல் கார்ப்பரேட், பிர் ஹேரா பெர்ரி ஆகிய படங்களில் நடித்தார். 2005ல் நோ என்ட்ரி, 2008ல் ரேஸ், 2012ல் ராஷ், 2015ல் அலோன் ஆகிய படங்களில் நடித்து முன்னணி நடிகைகளுக்கே சவால் விட்டார். 2016ல் கரன் சிங் குரோவர் என்ற நடிகரை மணந்து கொண்டார்.
பிபாஷா பாசு உடற்பயிற்சி செய்யும் அழகே கண்கொள்ளாக் காட்சியாகத் தான் உள்ளது. எவ்வளவு அழகாக எளிமையாக உடற்பயிற்சியைச் சொல்லி தருகிறார் என்பது அந்த வீடியோவைப் பார்ப்பவர்கள் உணர முடியும். 30 நிமிடத்திற்குள் நாம் எப்படி ஒர்க் அவுட் செய்து நமது உடலை பராமரிப்பது என்று பயிற்சி கொடுத்துள்ளார் பிபாஷா பாசு.

2005ல் ஜான் ஆபிரஹாம் உடன் இணைந்து பாலிவுட் பாடீஸ் என்ற டிவிடியை வெளியிட்டுள்ளார். டெல்லி மாரத்தானில் கலந்து கொண்டதுதான் எனக்கு இன்ஸ்பிரேஷனாகி பிட்னஸ் செய்வது எப்படி என்று கற்றுக்கொண்டு பயிற்சி செய்ய ஆர்வத்தைத் தூண்டியது என்கிறார் இந்த அழகு தேவதை.
