Actor Sri: நடிகர் ஸ்ரீயின் நிலைமை ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. நம்ம வீட்டு பையனுக்கு ஏதாவது ஒன்னுனா எப்படி வருத்தப்படுவோமோ அப்படித்தான் ஸ்ரீயின் நிலைமையை பார்த்து ரசிகர்களும் மன வருத்தத்தில் இருக்கின்றனர். சொல்லிக் கொள்ளும் படி ஸ்ரீ ஒரு பெரிய அந்தஸ்தை உடைய நடிகரும் கிடையாது. ஆனால் அவர் தேர்ந்தெடுத்து நடித்த படங்கள் அப்படி.
மிஷ்கின் இயக்கத்தில் ஓநாயும் ஆட்டுக்குட்டியும், இறுகப்பற்று, வில் அம்பு போன்ற படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படங்கள். இதில் வில் அம்பு படத்தில் ஸ்ரீயுடன் நடித்த நடிகை சாந்தினி ஸ்ரீ பற்றி பல்வேறு விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். அதாவது ஸ்ரீயை பொறுத்தவரைக்கும் சினிமாவில் நடித்து பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர் கிடையாது.
சில படங்கள் நடித்தாலும் மக்கள் மனதில் அந்த படங்கள் நிலைத்து நிற்க வேண்டும் என்றுதான் நினைப்பார். அப்படிப்பட்ட படங்களைத்தான் தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். ஆனால் வில் அம்பு படத்திற்கு பிறகு 6 வருடம் அவரை தொடர்பு கொண்டேன். அவரை ரீச் பண்ணவே முடியவில்லை. குறுஞ்செய்தி அனுப்பினாலும் அதை பார்க்கிறார். ஆனால் பதில் அவரிடம் இருந்து வந்ததில்லை. அதன் பிறகு அவரை தொடர்பு கொள்ளவில்லை .
ஆனால் வில் அம்பு பட இயக்குனர் ரமேஷும் ஸ்ரீயை தொடர்பு கொண்ட போதும் அவரிடம் ஸ்ரீ பேசவில்லை. அதுமட்டுமில்லாமல் நிறைய படங்களில் நடிக்க கூடிய வாய்ப்பு வந்திருக்கிறது. அதை எல்லாம் ஸ்ரீ ரிஜக்ட் செய்துவிட்டார். சினிமாவை மிகவும் நேசிக்க கூடியவர். இயக்குனர் ரமேஷ் கடைசியாக ஸ்ரீயிடம் பேசிய போது ‘அவர் ஒரு கதை எழுதி வருவதாகவும் அதை ஸ்ரீயே இயக்கி அவரே நடிக்க போவதாகவும்’ தெரிவித்திருக்கிறார்.
மிகவும் தைரியமான நபர் ஸ்ரீ. ஆல்கஹால் போன்றவைகளை பயன்படுத்தினார் என்று சொல்கிறார்கள். ஆனால் வில் அம்பு படத்தில் நடித்த வரைக்கும் ஸ்ரீயிடம் எந்தவொரு கெட்டப் பழக்கமும் இருந்ததாக தெரியவில்லை. ஆனால் ஏதோ விஷயம் அவரை பெரிய அளவில் பாதித்திருக்கிறது. பணத்தை மட்டும் அவர் நேசிக்கவில்லை. பணத்தை விட சினிமாவைத்தான் நேசித்தார்.
ஆனால் வில் அம்பு படத்தில் எனக்கு கிடைக்க வேண்டிய சம்பளம் கிடைத்தது. எனக்கு அதில் பிரச்சினை இல்லை. உடனே கொடுத்துவிட்டார்கள். அதனால் ஸ்ரீயை நல்ல படியாக மீட்டெடுத்து அவர் மீண்டு வர வேண்டும். அவருக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும். நல்ல மனிதர். சினிமா மீது அதிக பற்று கொண்டவர் என சாந்தினி ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.