சோப்பு போடுற சீன்ல நடிக்கனுமா? விஜய் ஹீரோனு சொல்லியும் நடிக்க மறுத்த நடிகை
Vijay: எந்தவொரு நடிகைக்கும் பெரிய கனவாக இருப்பது சினிமாவில் இருக்கும் பெரிய பெரிய நடிகர்களின் படங்களில் ஏதாவது ஒரு ஃபிரேமில் தெரிந்தால் போதும். அதுவே பெரிய பாக்கியம் என்பதுதான். அந்த வகையில் விஜய் ஹீரோ என்று சொல்லியும் அவருடன் ஜோடி சேர மறுத்த நடிகை பற்றித்தான் இப்போது சோசியல் மீடியாவில் பெரும் வைரலாக போய்க் கொண்டிருக்கின்றது.
தமிழ் சினிமாவில் ஒரு மிகப்பெரிய அந்தஸ்தை உடைய நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். அடுத்து அரசியலிலும் தனது செல்வாக்கை நிருபிக்க காத்துக் கொண்டிருக்கிறார். அவருடைய அரசியல் பயணத்தில் விஜயை பின் தொடர தமிழகமெங்கும் லட்சக்கணக்கான ரசிகர்கள் ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதையும் படிங்க: வீடு மட்டும் 1 கோடி… சம்பளமே இத்தனை லகரமா? உணமையை உடைத்த ஆல்யா மானசா
வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை நேரடியாக எதிர்கொள்ள இருக்கின்றார் விஜய். விஜயுடன் ஜோடியாக நடித்த சிம்ரன், ஜோதிகா, சினேகா என அனைவருக்கும் விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்து வருகிறது.
இந்த நிலையில் விஜயுடன் ஜோடியாக நடிக்க வாய்ப்பு வந்தும் அந்த வாய்ப்பை தட்டிக் கழித்திருக்கிறார் பிரபல நடிகை சார்மிளா. 90களில் பிரபலமான சார்மிளா முதன் முதலில் பிரசாந்துக்கு ஜோடியாகத்தான் அறிமுகமானார்.தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் கன்னடத்திலும் இவர் பல படங்களில் நடித்திருக்கிறார்.
இதையும் படிங்க: மஜாவா இருக்குறியே பஞ்சு மிட்டாயா!.. வேறலெவலில் கிறங்கவைக்கும் கீர்த்தி சுரேஷ்!…
விஜய் நடித்த நாளைய தீர்ப்பு மற்றும் ரசிகன் போன்ற படங்களில் முதலில் நடிக்க இருந்தது சார்மிளாதானாம். அதுவும் ரசிகன் படத்தில் விஜய் நடிகைக்கு சோப்பு போடுகிற மாதிரி ஒரு காட்சியில் நடித்திருப்பார். அந்த காட்சியை பற்றி கேட்டதுமே சார்மிளா வேண்டாம் என மறுத்துவிட்டாராம்.
அதுமட்டுமில்லாமல் அதே படத்தில் விஜய்க்கும் சங்கவிக்கும் இடையே ஒரு க்ளாமரான பாடலும் இருக்கும். அதே வேளையில் லிப் டூ லிப் சீனும் இருக்கும். இதெல்லாம் கேட்டுவிட்டுத்தான் சார்மிளா படத்தில் நடிக்க மறுத்துவிட்டாராம். மற்ற படி விஜய் கூட நடிப்பது என்பது ஒரு பெரிய வரப்பிரசாதம். க்ளாமரான சீனில் நடிக்கமாட்டேன் என்று முன்பே முடிவெடுத்திருந்ததால்தான் விஜய் படங்களை மறுக்க வேண்டியதாகிவிட்டது என சார்மிளா கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க: டீ கப் தீண்டாமை பேசி ட்ரோலில் சிக்கிய பா.ரஞ்சித்!.. தங்கலான் ரிலீஸ் நேரத்தில் இது தேவையா?..
ஆனால் சார்மிளாவுக்கு க்ளாமர் எல்லாம் வராது என கன்னடத்தில் பத்திரிக்கைகளில் செய்திகள் எழுத அந்த செய்தியை பொய்யாக்க வேண்டும் என்பதற்காக கன்னடத்தில் ஒரு க்ளாமர் படத்தில் நடித்தார் சார்மிளா என்பது குறிப்பிடத்தக்கது.