சிம்புவுக்கே சவால் விட்ட அறிமுக நடிகை… பின்னாளில் டாப் நடிகையாக வலம் வந்த தரமான சம்பவம்!!

by Arun Prasad |
Charmy Kaur and STR
X

Charmy Kaur and STR

தமிழின் முன்னணி நடிகராக வலம் வரும் சிம்பு, தொடக்கத்தில் தனது தந்தை டி.ராஜேந்தர் இயக்கிய பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தார். அதனை தொடர்ந்து “காதல் அழிவதில்லை “ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகனாக அறிமுகமானார்.

அதன் பின் தனது தனித்துவமான நடிப்பால் தனக்கென தனி ரசிகர் கூட்டத்தையே உருவாக்கினார். லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று அறியப்பட்ட சிம்பு, யங் சூப்பர் ஸ்டாராக உயர்ந்தார். “மன்மதன்”, “வல்லவன்”, “விண்ணத்தாண்டி வருவாயா”, “வாலு” என பல திரைப்படங்களில் நடித்த சிம்பு, காதல் தோல்வி காரணமாக சினிமாவில் கவனம் செலுத்த தவறினார்.

Maanaadu

Maanaadu

இதனால் அவர் மேல் பல புகார்கள் எழுந்தது. எனினும் அப்புகார்களை எல்லாம் தவிடுபொடியாக்குவது போல் மீண்டும் தனது உடலை சிக்கென குறைத்து “ஈஸ்வரன்” திரைப்படத்தில் கம் பேக் கொடுத்தார். இதனை தொடர்ந்து சிம்பு நடித்த “மாநாடு” திரைப்படம் அவரது கேரியரிலேயே முக்கிய வெற்றித்திரைப்படமாக அமைந்தது.

இந்த நிலையில் சிம்பு அறிமுகமாகிய “காதல் அழிவதில்லை” திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த சார்மி குறித்து ஒரு சுவாரஸ்ய தகவலை பிரபல தயாரிப்பாளரும் நடிகருமான சித்ரா லட்சுமணன் தனது பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.

இதையும் படிங்க: “எனக்கு இப்போ ஒரு பாட்டு வேணும்”… ஷூட்டிங் முடிந்தும் அலப்பறையை கொடுத்த வடிவேலு… இப்படி பண்றீங்களேம்மா!!

Charmy Kaur

Charmy Kaur

நடிகை சார்மி தொடக்கத்தில் தெலுங்கு திரைப்படத்தில் நடித்திருந்தாலும், தமிழில் “காதல் அழிவதில்லை” என்ற திரைப்படத்தில்தான் அறிமுகமானார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது சார்மிக்கு ஒழுங்காக நடனம் ஆட வராதாம். சிம்பு ஏற்கனவே நடனத்தில் பிச்சு உதறுவார் என்பதால் சார்மியால் அவரது நடனத்திற்கு ஈடுகொடுத்து ஆடமுடியவில்லையாம். ஆதலால் சிம்பு, சார்மியை கடுமையாக விமர்சனம் செய்தாராம்.

Charmy Kaur

Charmy Kaur

இதனை கேட்ட சார்மி “இனிமேல் நடனத்தில் மட்டுமல்ல, சினிமாவிலும் ஜெயித்து காட்டி இந்த சினிமா உலகையே ஒரு கலக்கு கலக்குவேன்” என சிம்புவிடம் கூறினாராம். ஆனால் சிம்புவோ அதற்கு ஏளனமாக சிரித்துள்ளார். மேலும் சார்மி சினிமா உலகில் தாக்குப்பிடிக்கப்போவதில்லை எனவும் சிம்பு நினைத்தாராம்.

ஆனால் பின்னாளில் தெலுங்கின் டாப் நடிகைகளுள் ஒருவராக உயர்ந்தார் சார்மி. மேலும் தற்போது தெலுங்கின் மிகப்பெரிய தயாரிப்பாளராகவும் சார்மி திகழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story