குடும்ப பெண் இப்படியா நடந்துக்கொள்வது? மேடையில் கணவரை அடித்த தேவயானி!
ஹோம்லியான நடிகையாக தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் தேவயானி. மிகவும் அமைதியான, அடக்கமான குடும்ப பெண்ணாக நடித்து எல்லோரது கவனத்தையும் ஈர்த்த தேவயானிக்கு இன்றளவும் ஒரு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. கன்னடத் தந்தைக்கும் மலையாள தாய்க்கும் மகளாக பிறந்த தேவயானி தமிழ், தெலுங்கு மற்றும் மளையாள மொழிப் படங்களில் நடித்துள்ளார்.
1993ம் ஆண்டு சாத் பென்சொமி வங்காள மொழி படத்தில் நடித்து அறிமுகம் ஆன இவர் 1994ம் ஆண்டு தொட்டா சிணுங்கி படத்தில் நடித்து அறிமுகம் ஆனார். முதல் படத்திலேயே தனது குட்டி முகம் கியூட்டான நடிப்பால் அனைவரையும் கவர்ந்தார். அதன் பின்னர் கல்லூரி வாசல், காதல் கோட்டை, சூரிய வம்சம், நினைத்தேன் வந்தாய், பூந்தோட்டம், நீ வருவாய் என பல தொடர் ஹிட் படங்களில் நடித்து நட்சத்திர நடிகையாக ஜொலித்தார்.
இவர் தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனரான ராஜகுமாரனும் காதலித்து பெற்றோர்களை எதிர்த்து நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்துக்கொண்டார். இன்று இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மகிழ்ச்சியாக குடும்ப வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள். இந்நிலையில் சமீபத்தில் ராஜகுமாரன் தேவயானி இருவரும் சேர்ந்து பேட்டி கொடுத்தார்கள் .
அப்போது தேவயானிக்கே கேமராபொங்கல் போகஸ் வைத்ததால்... ராஜகுமாரன் நான் வேணா அப்படி தள்ளி போய் நின்னுக்கட்டுமா? வீட்ல எப்புடி நான் பேசவே மாட்டேனோ அதே போல் இங்கும் நான் பேசவே கூடாது தேவயானி மட்டும் பேசினால் போதும்னு சொல்றீங்களா? என கேட்க தேவயானி வெட்க சிரிப்பு சிரித்துக்கொண்டே செல்லமாக அவரை அடித்தார் . அதெல்லாம் இல்லைங்க அவர் வீட்ல நல்லாவே பேசுவாரு என கூறி சிரித்தார் தேவயானி. இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.