டிஸ்கோ சாந்தியிடம் தப்பா நடந்துகொண்ட ரசிகர்! அம்மணி செஞ்சத பாத்து ஷாக் ஆன சிரஞ்சீவி
தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகைகளில் முக்கியமானவர் சில்க் ஸ்மிதா. இவரைப்போல மற்றும் ஒரு நடிகையான டிஸ்கோ சாந்தியும் இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்ட கனவு கன்னியாக வலம் வந்தார்.
வெள்ளை மனசு என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான டிஸ்கோ சாந்தி ஊமை விழிகள் திரைப்படத்தில் ராத்திரி நேரத்து பூஜையில் என்ற பாடல் மூலம் தமிழகத்தின் பட்டித் தொட்டி எங்கும் மிகவும் பிரபலமானார்.
அந்த ஒரு பாடல் தான் அவரை பின்னாளில் பல்வேறு மொழிகளில் ஏராளமான படங்களில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட வரவழைத்தது. சில்க் ஸ்மிதாவிற்கு இணையான ஒரு அந்தஸ்தை பெற்றார் டிஸ்கோ சாந்தி.
1996 ஆம் ஆண்டு துறைமுகம் என்ற படத்தில் நடித்தார். அதே வருடம் நடிகர் ஸ்ரீஹரியை திருமணம் செய்து கொண்டு திரை துறையிலிருந்து விலகிய டிஸ்கோ சாந்தி தனது கணவர் குழந்தைகளுடன் அமைதியான வாழ்க்கையை வாழ்ந்தார்.
அதன் பிறகு அவருடைய கணவர் திடீர் உடல்நல குறைவால் காலமானார். இப்போது தனது குழந்தைகளுடன் வாழ்ந்து வரும் டிஸ்கோ சாந்தி தனது பழைய அனுபவங்களை ஒரு பேட்டியின் மூலம் பகிர்ந்தார்.
அதாவது சிரஞ்சீவியுடன் ஒரு படத்தில் கமிட்டான டிஸ்கோ சாந்தி ஒரு போட்டில் நடனமாடும் காட்சியை முடித்துவிட்டு கிளம்பி கொண்டு இருந்தாராம் .அப்போது சிரஞ்சீவியின் புகழ் காரணமாக அவரை சூழ்ந்து கொண்டு ரசிகர்கள் டிஸ்கோ சாந்தியையும் சூழ்ந்து கொண்டனர் .சிரஞ்சீவி விறுவிறுவென போக இந்த ரசிகர்களின் ஒருவர் டிஸ்கோ சாந்தியின் பின்பக்கம் தவறான எண்ணத்தில் கிள்ளி இருக்கிறார்.
இதனால் கடும் கோபம் அடைந்த டிஸ்கோ சாந்தி அந்த ரசிகரின் கையை பிடித்து இழுத்து தரையில் போட்டு மிதி மிதி என மிதித்து விட்டாராம். உடனே அங்கே சலசலப்பு ஏற்பட இதை அறிந்த சிரஞ்சீவி பாட்டுக்கு வந்தாராம். டிஸ்கோ சாந்தியிடம் "என்ன இதெல்லாம்? ஏன் இப்படி செய்தாய் "என அவருடைய மலையாள மொழியில் கேட்க டிஸ்கோ சாந்தி தனியாக விட்டு நீங்க போயிட்டீங்க என்று அவரிடம் கத்தினாராம் .
அதன் பிறகு டிஸ்கோ சாந்திக்கு ஒரு பத்து பேர் உதவியாளர்கள் வைத்து பாதுகாப்பாக அனுப்பப்பட்டாராம்.