8 பேரை திருமணம் செய்து கொண்ட நடிகை! எதிலயுமே திருப்தி இல்லையாம் - அடக்கடவுளே

by Rohini |   ( Updated:2023-08-03 16:25:03  )
ali
X

ali

சினிமாவை பொறுத்தவரைக்கும் திருமணம் எத்தனை முறையாவது செய்து கொள்ளலாம்.ஆனால் நிஜ வாழ்க்கையில் அது பெரிய கேடாக மாறக்கூடும். அதுவும் ஒவ்வொரு நாட்டின் கலாச்சாரத்துக்கு ஏற்றப்படி திருமண முறைகள் என்பது வேறுபடும். அதுவும் நமக்கு தெரிந்த பிரபலங்களே 2 மற்றும் 3 முறை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.

அந்த வகையில் பிரபல ஹாலிவுட் நடிகை ஒருவர் தனது வாழ்க்கையில் 8 முறை திருமணம் செய்து கொண்டிருக்கிறாராம். அவர்தான் பிரபல மாடல் அழகியும் ஹாலிவுட் நடிகையுமான எலிசபெத் டெய்லர்.லண்டனை பூர்வீகமாக கொண்ட எலிசபெத் டெய்லர் அழகில் பேரழகியாவார்.

இதையும் படிங்க : அடிபட்டும் அடங்காத அஜித்!.. மாட்டிக்கொண்டு முழிக்கும் மகிழ் திருமேனி.. நடப்பது இதுதான்!…

இவர் வாழ்ந்த காலத்தில் அமெரிக்காவிலும் ஐரோப்பிய கண்டத்திலும் இந்த நடிகையை பற்றி பேசாமல் இருந்ததில்லை. சிறுவயதிலேயே இளம் மற்றும் டீ ஏஜ் கதாபாத்திரங்களில் மிக அற்புதமாக நடித்து உலக ரசிகர்களை கவர்ந்தவர் எலிசபெத்.

ali1

ali1

இவர் நடித்த பெரும்பாலான படங்கள் அனைத்தும் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. இவருடைய அழகை யாராலும் வர்ணிக்க முடியாது. அந்த அளவுக்கு பேரழகியாக இருந்திருக்கிறார்.அனைவருக்கும் தெரிந்த கதாபாத்திரமான க்ளியோபட்ராவின் படத்தில் நடித்து மிகப்பெரிய அங்கீகாரத்தை பெற்றார்.

இரண்டு முறை ஆஸ்கார் விருதை பெற்ற எலிசபெத் டெய்லர் கிட்டத்தட்ட 8 முறை திருமணம் செய்து கொண்டாராம். அதுவும் ரிச்சர்ட் பர்டனுடன் இரண்டு முறை திருமணம் செய்தாராம். முதல் முறை திருமணம் செய்து விவாகரத்து பெற்று மீண்டும் இரண்டாவதாக அவரையே திருமணம் செய்திருக்கிறார்.

இதையும் படிங்க : இளைய தளபதி விஜய் ‘தளபதி’யாக மாறியதற்கு காரணம் அவர்தானாம்!.. கச்சிதமா காய் நகர்த்திய எஸ்.ஏ.சி..

அதே போல் தயாரிப்பாளர், இயக்குனர்கள் என ரிச்சர்ட் பர்டனையும் சேர்த்து 8 முறை திருமணம் செய்த எலிசபெத் டெய்லர் தன்னுடைய 70 வது வயதில் மரணமடைந்தார். இத்தனை முறை திருமணம் செய்தும் எந்த திருமணத்திலும் திருப்தி இல்லாமல்தான் எலிசபெத் வாழ்க்கையை நகர்த்தியிருக்கிறார் என்று இந்த தகவலை கூறிய காந்தராஜ் தெரிவித்தார்.

Next Story