தளபதி விஜய் ஒரு காலத்தில் இளையதளபதி ஆக இருந்தார். அப்போது அவர் நடித்த படங்கள் பெரும்பாலும் காதல் படங்களாக வந்தன. அதன்பிறகு மெல்ல ஆக்ஷன் பக்கம் திரும்பினார். அந்த நேரத்தில் அவருடன் நடிக்க நடிகை மீனாவைத் தேடி வாய்ப்புகள் வந்தன. ஆனால் அவரால் நடிக்க முடியவில்லை. இதற்கு என்ன காரணத்தை மீனா சொல்கிறார் என்று பார்ப்போம்.
விஜய் உடன் ப்ரியமுடன் நான் தான் பண்ணவேண்டியது. அதுல கௌசல்யா நடிச்சிருப்பாங்க. அதுக்கு கால்ஷீட் பிராப்ளம். அப்போ ப்ளைட்ஸ் எல்லாம் இந்த அளவுக்குக் கிடையாது. கார், டிரெய்ன் டிராவல் தான். ஏறினோமா, இறங்கினோமான்னு தான் இருக்கும்.
ப்ரண்ட்ஸ் படமும் நான் பண்ண வேண்டியது தான். நான் அப்போ ரொம்ப பிசி. என்னால பண்ண முடியல. எனக்கு ரொம்ப வருத்தமா இருந்தது. அவரோட மட்டும் ஏன் இப்படி தள்ளிப் போய்க்கிட்டே இருக்குன்னு… நினைச்சென்.
தெறி படத்து சூட்டிங்ல கூட சொன்னாரு. ‘நான் நியூ ஃபேஸ்ங்கறதால தான எங்கூட நடிக்கல..’ன்னு கேட்டாரு. அப்படி எல்லாம் இல்லை. எனக்கு டேட் பிராப்ளம்னு சொன்னேன். ஷாஜஹான் படத்துல ஒரு பாட்டுக்கு மட்டும் ஆடினேன். இந்தப் பாட்டைப் பண்ணலாமா, வேணாமான்னு ரொம்ப யோசிச்சேன். ஆனா அது தெலுங்குல ரொம்ப ஹிட்.
ஆர்.பி.சௌத்ரி சாரே போன் பண்ணிக் கேட்டாரு. ஒரு சாங் கெஸ்ட் அப்பியரன்ஸா பண்ணுங்கன்னாரு. ‘ஓகே’ன்னுட்டேன். தெலுங்குல ஆட்டக்காவாலா, பாட்டக்காவாலான்னு சிரஞ்சீவியோட பாடல் கிளாஸா வந்து இருந்தது. அதைத் தமிழ்ல சரக்கு வச்சிருக்கேன் முறுக்கு வச்சிருக்கேன்… அப்படின்னு தமிழ்ல வந்துருந்தது. இது என்ன பாட்டு?
தெரியாம ஒத்துக்கிட்டேனே… இந்த மாதிரி பாட்டை எல்லாம் ஹீரோயின்ஸ் பண்ணலாமா… அவங்க சொன்னாங்க… இவங்க சொன்னங்கன்னு எல்லாம் பண்ணக்கூடாது… அப்படின்னு புலம்பிக்கிட்டே இருந்தேன்.
இதையும் படிங்க… கோட் படத்தில் இப்படி ஒரு காட்சியா?!. சும்மா விசில் பறக்கப்போகுது!. வெறித்தனம் காட்டிய வெங்கட்பிரபு!..
ஆனா ராகவா லாரன்ஸ் மாஸ்டர் ரொம்ப நல்ல கோரியோகிராப் பண்ணியிருந்தாங்க. அங்கேயும் எனக்கும் விஜயக்கும் போட்டி தான். யார் பர்ஸ்ட் டான்ஸ் மூவ்மெண்டக் கத்துக்கறதுன்னு… யார் நல்லா ஆடுறதுன்னு… அவர் நைட் சூட்ல அவர் ஒரு காருல வெயிட் பண்ணுவாரு.
நான் ஒரு கார்ல வெயிட் பண்ணுவேன். ரெடின்னதும் நான் முதல்ல போயிடுவேன். பக்காவா 2வாட்டி டிரையல் பண்ணிடுவேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
ஐயப்ப பக்தர்களின்…
இசை அமைப்பாளர்,…
தமிழ்த்திரை உலகில்…
Thalapathy 69: விஜய்…
இளையராஜா 'இசைஞானி'…