இவரா ஹீரோ?!.. எம்.ஜி.ஆரை பார்த்து நக்கலாக கமெண்ட் நடிகை.. அப்புறம் என்னாச்சி தெரியுமா?...
50,60களில் முன்னணி நடிகராக இருந்தது மட்டுமில்லாமல் திரையுலகையே கட்டி ஆண்டவர் எம்.ஜி.ஆர். நாடக நடிகராக இருந்து படப்பிடிப்படியாக முன்னேறி ரசிகர்களை தன்பக்கம் இழுத்தவர். ஒருகட்டத்தில் முன்னணி ஹீரோவாக மாறினார். துவக்கத்தில் நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து வந்த எம்.ஜி.ஆர் அதன்பின் ஆக்ஷன் படங்களில் நடிக்க துவங்கினார். நடிப்புக்கு சிவாஜி எனில் ஆக்ஷன் காட்சிகளுக்கு எம்.ஜி.ஆர் என மாறிப்போனது.
எம்.ஜி.ஆர் படப்பிடிப்பிற்கு வந்தாலே அனைவரும் எழுந்து வணக்கம் சொல்வார்கள். இயக்குனர் முதல் அப்படத்தில் நடிக்கும் நடிகை மற்றும் சின்ன சின்ன நடிகர், நடிகைகள் என எல்லோரும் அவருடன் மரியாதையாக பேசுவார்கள். ஆனால், படப்பிடிப்பில் எம்.ஜி.ஆரையே ஒரு நடிகை கிண்டலடித்த சம்பவம் ஒருமுறை நடந்தது.
எம்.ஜி.ஆர் அதிக பொருட்செலவில் தயாரித்து இயக்கி நடித்த திரைப்படம் உலகம் சுற்றும் வாலிபன். ஜப்பான், மலேசியா, சிங்கப்பூர் என பல இடங்களில் இப்படத்திற்கான படப்பிடிப்பை எம்.ஜி.ஆர் நடத்தினார். இந்த படத்தில் லதா, மஞ்சுளா, சந்திரகலா என மூன்று நடிகைகளை எம்.ஜி.ஆர். நடிக்க வைத்தார். இவர்கள் போதாது என தாய்லாந்து நாட்டை சேர்ந்த மெக்கா என்கிற நடிகையும் நடித்திருந்தார்.
அவர் படப்பிடிப்பில் எம்.ஜி.ஆரை பார்த்ததும் ‘இவரா இப்படத்தின் ஹீரோ?.. மிகவும் வயதானவர் போல இருக்கிறாரே’ என நக்கலாக கமெண்ட் நடித்துள்ளார். ஏனெனில், அப்போது எம்.ஜி.ஆர் வேட்டி, சட்டை, கண்ணாடி, தலையில் தொப்பி என அணிந்திருந்தார். மெக்கா அப்படி சொன்னது எம்.ஜி.ஆர் காதிலும் விழுந்துவிட்டது. அவர் எந்த ரியாக்ஷனும் செய்யவில்லை. மெக்கா பேசியதை கேட்ட படப்பிடிப்பு குழுவினர் ‘என்ன நீங்கள் இப்படி பேசிவிட்டீர்கள். நாளைக்கு படப்பிடிப்பில் அவரை பாருங்கள்’ என சொல்லிவிட்டனர்.
அடுத்த நாள் படப்பிடிப்பில் பேண்ட், சர்ட், விக்கெல்லாம் அணிந்து இளமையான தோற்றத்தில் எம்.ஜி.ஆரை பார்த்ததும் மெக்கா வியந்துவிட்டாராம். எம்.ஜி.ஆரிடம் சென்று ‘என்னை மன்னித்துவிடுங்கள். உண்மையிலேயே நீங்கள் அழகாகவும், இளமையாகவும் இருக்கிறீர்கள்’ என சொன்னாராம்.