சிக்குன்னு இருக்கு சின்ன பாப்பா!... குட்டகவுனில் மனசை மயக்கும் கேப்ரியல்லா...
விஜய் டிவி மூலம் ரசிகர்களிடம் பலரும் பிரபலமாகியுள்ளனர். அதில் கேப்ரியல்லாவும் ஒருவர். சிறு வயது முதலே நடனம் மீது ஆர்வம் ஏற்பட்டு நடனம் கற்றுக்கொண்டார். 3 உள்ளிட்ட சில திரைப்படங்களில் சிறுமியாகவும் நடித்துள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான பல நடன நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டவர் கேப்ரியல்லா. சினிமாவில் நடிக்க அவர் எடுத்த முயற்சிகள் பலிக்கவில்லை. சிலரின் அறிவுரையால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பிக்பாஸ் வீட்டில் திறமையாக விளையாடி ரசிகர்களை கவர்ந்தார். ஆனாலும், அவரால் வெற்றி பெறமுடியவில்லை.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் மீண்டும் சினிமாவில் வாய்ப்பு தேடினார். ஆனால், முயற்சிகள் பலனளிக்கவில்லை. எனவே, நம்ம விஜய் டிவி இருக்கும்போது என்ன கவலை என கணக்குப்போட்ட கேப்ரியல்லா சீரியல் நடிகையாக மாறினார். தற்போது ஒளிபரப்பாகி வரும் ‘ஈரமான ரோஜாவே’ சீசன் 2 சீரியலில் நடித்து வருகிறார்.
இதையும் படிங்க: எதுக்கும் ஒரு அளவு வேண்டாமா?.. தவில் வாசித்து பிரபல நடிகைக்கு குடைச்சல் கொடுத்த பாலையா!..
ஒருபக்கம், ரசிகர்கள் தன்னை மறந்துவிடக்கூடாது என கட்டழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், குட்டகவுன் அணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.