இது உனக்கு செட் ஆகாதுடி!.. குடும்ப குத்துவிளக்காக மாறிய கேபி!..
சின்னத்திரையில் நடன கலைஞராக தோன்றியவர் நடிகை கேப்ரியல்லா. விஜய் டிவியில் ஒளிபரப்பான டான்ஸ் ஷோவில் போட்டியாளராக கலந்து கொண்டு சாம்பியன் பட்டத்தையும் வென்றார்.
அதன் பின் பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்தாலும் தன்னை நிரூபிக்க ஒரு தளம் வேண்டும் என கருதி பிக்பாஸை தேர்வு செய்தார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு அனைவருக்கும் பிடித்த போட்டியாளராக மாறினார். ஒரு செல்லப்பிள்ளையாகவே வலம் வந்தார்.
அந்த நிகழ்ச்சிக்கு பிறகு அவருக்கும் அதே நிகழ்ச்சியில் மற்றொரு போட்டியாளராக களமிறங்கில் ஆஜித்திற்கும் இடையே ஒரு நெருங்கிய நட்பு ஏற்பட்டது. அது இப்போது வரை தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
இருவரும் அடிக்கடி ஏராளமான டிக்டாக் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கடுப்பேத்தி வருகின்றனர். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவில் நடித்து குடும்ப பெண்களின் அபிமான நட்சத்திரமாகவே மாறிவிட்டார்.
மேலும் அவ்வபோது சமூக வலைதளங்களிலும் தன்னுடைய புகைப்படங்களை பதிவிட்டு ட்ரீட் வைத்து வருகிறார். எப்பொழுது மாடர்ன் உடையிலேயே புகைப்படங்களை வெளியிடும் கேபி இன்ஸ்டாவில் முழுவதுமாக சேலை அணிந்தவாறு ஒரு குடும்ப குத்து விளக்காகவே மாறியது மாதிரியான புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.