Categories: latest news

கெனிஷா யாருடன் ஜாலியா விளையாடுறாரு பாருங்க!.. விலங்குகள் மேல இவ்ளோ பாசமா!..

தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகள் ப்ரீத்தாவின் திருமண விழாவில் ரவி மோகனுடன் கெனிஷா கலந்து கொண்டதன் மூலம் அனைவரின் கவனத்தை ஈர்த்தார். இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து புகைப்படங்களை போஸ்ட் செய்து வரும் நிலையில் இன்று நாய் மற்றும் யானையுடன் உள்ள போட்டோக்களை ஷேர் செய்துள்ளார்.

கெனிஷா ஒரு தமிழ் பாடகி, நடனக் கலைஞர், மற்றும் மனவள சிகிச்சையாளர் என பல திறமைக் கொண்டவர். இவரது பெற்றோர்கள் இருவரும் பாடகர்கள் என்பதால் இயல்பாகவே அவருக்கு இசை மேல் ஆர்வம் இருந்தது. ஆங்கிலம், தமிழ், இந்தி, கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய ஆறு மொழிகளில் பாடல்கள் பாடியுள்ளார். மேலும், எட்டு வகையான லத்தீன் நடனங்களைக் கற்றுக்கொண்டுள்ளார்.

டெஃப் ஃபிராக் மற்றும் ப்ளு நைனா ஆகிய ஆல்பம் பாடல்கள் மூலம் இசைத்துறையில் கவனம் பெற்றார். தீ ஸ்டேஜ் என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் பங்கேற்றிருந்தார். மேலும், மன அழுத்தம் மற்றும் பதட்டத்திற்கு சிகிச்சையளிக்கும் தனது ஹீலிங் மையம் மூலம் பலருக்கு உதவி செய்து வருகிறார்.

நடிகர் ஜெயம் ரவி மற்றும் அவரது மனைவி ஆர்த்தியின் விவாகரத்து விவகாரத்தில் கெனிஷாவின் பெயர் அடிப்பட்டு சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவிய நிலையில் அதை நிரூபிக்கும் வகையில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் பெண்ணின் திருமணத்திற்கு ரவி கெனிஷாவுடன் ஜோடியாக கலந்து கொண்டதால் சர்ச்சைகள் வெடித்தன.

இந்த சர்ச்சை குறித்து பலரும் அவதூறாக பேசிய நிலையில் நான் இசையை பிடித்துக்கொண்டு நிற்கிறேன். காயங்களை பாடங்களாக ஏற்றுக்கொள்கிறேன் என பதிவிட்டிருந்தார். இந்நிலையில் இன்று நாய் மற்றும் யானையுடன் சேர்ந்து எடுத்துக்கொண்டுள்ள புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து லைக்குகளை அள்ளியுள்ளார்.

Published by
Saranya M